வீடு / சமையல் குறிப்பு / வஞ்சிர மீன் தவா பிரை

Photo of Seer fish tawa fry by Priyadharshini Selvam at BetterButter
537
4
0.0(0)
0

வஞ்சிர மீன் தவா பிரை

May-19-2018
Priyadharshini Selvam
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வஞ்சிர மீன் தவா பிரை செய்முறை பற்றி

மீன் வறுவல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்யும் இந்த வஞ்சிரம் மீன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வஞ்சிரம் மீன் - அரை கிலோ  
  2. வெங்காயம் - 1
  3. பூண்டு - 7 பல்
  4. உப்பு - தேவைக்கு
  5. சோம்பு - 1 டீஸ்பூன்
  6. வரமிளகாய் - 8
  7. புளி - சிறிதளவு
  8. கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  9. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மீனை நன்றாக கழுவி வைக்கவும்.
  2. புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்
  3. மிக்சியில் சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், கரைத்த புளியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதனுடன் அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி மீனை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  6. இப்போது சுவையான மசாலா வஞ்சிரம் மீன் வறுவல் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்