வீடு / சமையல் குறிப்பு / காடை முட்டை பிரியாணி

Photo of Quail egg biryani by Priyadharshini Selvam at BetterButter
477
3
0.0(0)
0

காடை முட்டை பிரியாணி

May-19-2018
Priyadharshini Selvam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காடை முட்டை பிரியாணி செய்முறை பற்றி

காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா.காடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த காடை முட்டை பிரியாணி சுவைத்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீரக சம்பா அரிசி - 3 கப்
  2. காடை முட்டை - 6
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 3
  5. பச்சை மிளகாய் - 4
  6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  8. பிரியாணி மசாலா தூள் - 3 தேக்கரண்டி
  9. தேங்காய் பால் - ஒரு கப்
  10. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  11. நெய் - 2 மேசைக்கரண்டி
  12. இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
  13. பட்டை 2
  14. கிராம்பு 2
  15. ஏலக்காய் 2
  16. பிரிஞ்சி இலை 2
  17. கொத்தமல்லித் தழை தேவையான அளவு
  18. உப்பு தேவையான அளவு
  19. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காடை முட்டையை வேக வைத்து தோலுரித்து லேசாக கீறி வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியே அரைத்து வைக்கவும்.
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  4. பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  5. அதனுடன் பிரியாணி மசாலா தூள் போட்டு கிளறி விடவும். பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கி தேங்காய் பால், கொத்தமல்லித் தழை சேர்க்கவும்
  6. அரிசியை களைந்து சேர்த்து, அதனுடன் வேக வைத்த முட்டை, உப்பு சேர்த்து 5 நிமிடம் மசாலா சுருள வேக விடவும்.
  7. பின் முட்டையை தனியே எடுத்து வைத்து விட்டு, 5 கப் தண்ணீர் விட்டு வெயிட் போடாமல் மூடி போட்டு ஆவி வந்ததும் 15 நிமிடம் சிம்மில் வேக விடவும்.
  8. சுவையான காடை முட்டை பிரியாணி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்