பெங்காலி ரசகுலா | Bengali Rasgulla/ Rosogolla in Tamil

எழுதியவர் Sharmila Dutta  |  4th May 2016  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Bengali Rasgulla/ Rosogolla by Sharmila Dutta at BetterButter
பெங்காலி ரசகுலாSharmila Dutta
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  12

  மக்கள்

660

1

Video for key ingredients

  பெங்காலி ரசகுலா recipe

  பெங்காலி ரசகுலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Bengali Rasgulla/ Rosogolla in Tamil )

  • 8 கப்/2 லிட்டர் முழு கொழுப்புடைய பசும்பால்
  • தயிர் 6 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
  • 3 மற்றும் 1/2 கப் சர்க்கரை
  • 2 தேக்கரண்டி கூடுதல் பால், சர்க்கரை பாகைச் சுத்தப்படுத்துவதற்கு
  • 2 தேக்கரண்டி ரவை அல்லது மைதா
  • வாசனைக்கு ஏலக்காய்

  பெங்காலி ரசகுலா செய்வது எப்படி | How to make Bengali Rasgulla/ Rosogolla in Tamil

  1. பாலை கொதிக்கவிடவும். அவ்வப்போது கலக்கவும். கொதிவரும்போது, அடுப்பை நிறுத்தவும். 1 நிமிடம் காத்திருக்கவும்.
  2. இப்போது தயிரை ஊற்றவும். பச்சைத் தண்ணீர்/வேயில் இருந்து பால் திடமாகும்வரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.
  3. பால் கட்டிகளை ஒரு பருத்தித் துணியில் சேகரித்து மேலும் உறையாமல் இருக்க உடனே சில்லென்ற தண்ணீரில் போடவும். உயரத்தில் தொற்றவிடவும், அதிகப்படியானத் தண்ணீர் சொட்டட்டும்.
  4. அதிகம் அழுத்தவேண்டாம், அப்படிச் செய்தால் கடினமாகிவிடும், அதிலிருந்து உங்களால் உருண்டை பிடிக்க முடியாது.
  5. அடர்த்தியான சர்க்கரைப் பாகைத் தயாரிக்க, 2 கப் சர்க்கரையை 2 கப் தண்ணீரோடு சேர்த்துச் சூடுபடுத்தவும்.
  6. கொதிவரும்போது, 1 தேக்கரண்டி பாலை பாகில் ஊற்றவும். சில நிமிடங்கள் கொதிக்கட்டும். இதற்கிடையில், கசடுகள் மேலே மிதக்க ஆரம்பிக்கும். நீக்கவிடவும்.
  7. 2 கம்பி பதத்திற்குச் சர்க்கரை பாகு வரும்வரை மீண்டும் கொதிக்கவிடவும். ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும்.
  8. வெண்ணையை /சென்னாவை அடித்துக்கொள்வது மிகவும் அவசியம். பிசையும் செயல்முறையைப் பொறுத்து வடிவம் தீர்மானிக்கப்படுகிறது.
  9. இப்போது கையிண் மேட்டுப் பகுதியைப் யன்படுத்தி சென்னாவை மசிக்கவும் பிசையவும் ஆரம்பிக்கவும். ரவை/மைதாவை ஒரு பைண்டிங் கொடுப்பதற்காகச் சேர்க்கவும்.
  10. மாவிலிருந்து ஒரு உருண்டையை செய்ய இயலும்வரை இந்தச் செயல்முறையைத் தொடரவும். மேலும் உங்கள் உள்ளங்கை சற்றே எண்ணெய் பசையுடையதாகிவிடும்.
  11. இப்போது மென்மையான மாவைத் தயாரித்துவிட்டீர்கள். அவற்றில் இருந்து சிறுசிறு உருண்டைகளைத் தயாரித்துக்கொள்ளவும், சமைத்த பிறகு அவை இரட்டிப்பாக உப்புவிடும்.
  12. மெலிதான சர்க்கரைப் பாகைச் செய்வதற்கு, 1 மற்றும் 1/2 கப் சர்க்கரையையும் 7 கப் தண்ணீரையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்க. கொதிக்கவிடவும்.
  13. சீஸ் உருண்டைகளை / வெண்ணெயை சமைப்பதற்கு, தண்ணீர் கொதிவந்ததும், வெண்ணெய் உருண்டைகளைப் போடவும்.
  14. அதிகமான உருண்டைகளை ஒரு தொகுப்பில் போடவேண்டாம். உப்புவதற்கு இடம் கொடுக்கவும்.
  15. 5 நிமிடங்கள் உயர் தீயில் பிறகு 15 நிமிடங்கள் சிறு தீயில் சமைக்கவும்.
  16. ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும், கரண்டியின் பின்புறத்தை ரசகுல்லாவின் மேற்புறத்தில் நகர்த்தி மையத்தில் கரண்டியைக் கவனமாக அசைக்கவும். ரசகுலாவை உப்புவதற்கு உதவிபுரியும்.
  17. ரசகுலாக்கள் 30 நிமிடங்களுக்குள் தயாராகிவிடும்.
  18. ரசகுலா தயாரானதும், அடர்த்தியான சர்க்கரைப் பாகில் போடவும்.
  19. எப்போதுவேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும்.

  எனது டிப்:

  ரசகுலா வெந்திருக்கிறதா என்பதை இரண்டு முறையில் சோதிக்கலாம். ஒரு கப் தண்ணீரில் ரசகுலாவை வைப்பது முதல் முறை. ரசகுலா மூழ்கி அடியில் தங்கினால், வெந்திருக்கிறது என்று பொருள். இல்லையெனில், மேலும் சில நிமிடங்கள் வேகவைக்கவும். ரசகுலாவின் ஒரு பகுதியை உங்கள் விரலில் அழுத்தவும். அழுத்த பகுதி மீண்டும் அசல் வடிவத்திற்குத் திரும்பிவந்தால், வெந்து இருக்கிறது என்று பொருள். ரசகுலா சிம்மில் இருக்கும் போது நீங்கள் சோதிக்கவேண்டும்.

  Reviews for Bengali Rasgulla/ Rosogolla in tamil (1)

  Dekila Vinothkumar2 years ago

  Yummy
  Reply

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.