நேபாளி உருளைக்கிழங்கு தம்/ ஆலு தம் | Nepali Alu Dum/ Alu Dum/ Aloo Dum in Tamil

எழுதியவர் Manisha Goyal  |  4th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Nepali Alu Dum/ Alu Dum/ Aloo Dum by Manisha Goyal at BetterButter
நேபாளி உருளைக்கிழங்கு தம்/ ஆலு தம்Manisha Goyal
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

277

0

நேபாளி உருளைக்கிழங்கு தம்/ ஆலு தம் recipe

நேபாளி உருளைக்கிழங்கு தம்/ ஆலு தம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Nepali Alu Dum/ Alu Dum/ Aloo Dum in Tamil )

  • கொத்தமல்லி இலை, நன்றாக நறுக்கியது
  • சுவைகேற்ப உப்பு
  • தண்ணீர் - 1/2 கப்
  • காஷ்மீர் சிகப்பு மிளகாய் தூள் - 1/2 டீக்கரண்டி
  • மஞ்சள்தூள்- 1/2 டீக்கரண்டி
  • கடுகு எண்ணெய் - 5 தேக்கரண்டி
  • கருப்பு சீரகம் / கலோஞ்சி - 1 டீக்கரண்டி
  • உலர்ந்த சிகப்பு மிளகாய் - 25 கிராம்
  • பூண்டு - 50 கிராம்
  • உருளைக்கிழங்கு, நடுத்தரமானது (வேகவைத்தது மற்றும் உரித்தது) - 1 கிலோ

நேபாளி உருளைக்கிழங்கு தம்/ ஆலு தம் செய்வது எப்படி | How to make Nepali Alu Dum/ Alu Dum/ Aloo Dum in Tamil

  1. மிளகாயை சூடு தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பூண்டை தோல் உரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். மிளகாய் மற்றும் பூண்டை அரைத்து நன்கு விழுதாக்கி கொள்ளவும்.
  3. அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். கருப்பு சீரகம் சேர்த்ததும் வெடிக்க தொடங்கும்.
  4. பூண்டு விழுது, தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கலந்துக் கொள்ளவும். இதை மூடிவைத்து வேகவிடவும். பின் இடைவிடாமல் கிளறிவிடவும்.
  5. எண்ணெய் தனியாக பிரிந்து போகும் வரை வேகவிடவும். வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  6. தொடர்ந்து வேகவிட்டு உருளைக்கிழங்கு மசாலாவில் சேரும் அளவிற்கு 10 நிமிடம் நன்றாக கிளறிவிடவும்.
  7. கொத்தமல்லி இலையை இதன் மேல்தூவி நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  8. இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.

எனது டிப்:

உங்களுக்கு பூண்டு சுவை பிடிக்கவில்லை என்றால், அதன் அளவை குறைத்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி மிளகாயின் அளவையும் சரிசெய்து கொள்ளலாம். மிளகாயைத் தவிர்க்கவும். நான் நிறத்திற்காக மட்டுமே பயன்படுத்தினேன்.

Reviews for Nepali Alu Dum/ Alu Dum/ Aloo Dum in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.