வீடு / சமையல் குறிப்பு / கோவா கோழிக்கறி மசாலா/சுவாட்டி

Photo of Goan chicken curry/ Xacuti  by Shashikala Teggi at BetterButter
1918
56
4.2(0)
0

கோவா கோழிக்கறி மசாலா/சுவாட்டி

May-04-2016
Shashikala Teggi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கோவா
  • ஸ்டிர் ஃபிரை
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நடுத்தர அளவு வெங்காயம்-2
  2. காஷ்மீர் சிகப்பு மிளகாய் 7-8
  3. பூண்டு 10-15
  4. தேங்காய் எண்ணெய் 6 டீக்கரண்டி
  5. உப்பு
  6. புளிக் கரைசல் 2-3 தேக்கரண்டி
  7. மஞ்சள்தூள் 1/2 டீக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு 1-2 தேக்கரண்டி
  9. வறுப்பதற்கு தேவையான உலர்ந்த பொருட்கள்:
  10. சீரகம் 1 டீக்கரண்டி
  11. மிளகு 1 டீக்கரண்டி
  12. கொத்தமல்லி விதை 3 டீக்கரண்டி
  13. பெருஞ்சீரகம் 1 டீக்கரண்டி
  14. கசகசா 2 டீக்கரண்டி
  15. 1 முழு நட்சத்திரம் சோம்பு
  16. 4 சிறிய இலவங்கப்பட்டை துண்டுகள்
  17. ஏலக்காய் 4
  18. கிராம்பு 4
  19. 1 சிறிய கப் வறுத்த உலர் தேங்காய்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கூறப்பட்டுள்ள தேவையான உலர்ந்த பொருட்களை நன்கு வாசம்வரை வறுக்கவும் . அவற்றை கருக விடாகூடாது அவ்வாறு கருகினால் அவை கசப்பாகிவிடும், பின் அதனை தட்டில் மாற்றிக் கொள்ளவும்.
  2. அதே பாத்திரத்தில் காஷ்மீரி சிகப்பு மிளகாயை நன்கு வறுத்து தட்டில் வைத்து கொள்ளவும். பின் அந்த பாத்திரத்தில் 2 டீக்கரண்டி தேங்காய் எண்ணெய்யில் பூண்டு நன்கு வெட்டப்பட்ட 1 நடுத்தரளவு உள்ள வெங்காயத்தையும் 2-3 நிமிடங்கள் குறைவான தீயில் வறுத்து தட்டில் மாற்றிக் கொள்ளவும். அதை ஆறவிடவும்.
  3. இவை அனைத்தையும் 1/2 கப் தண்ணிரில் நன்கு பசைப்போன்று அரைத்துக் கொள்ளவும்.
  4. கோழிக்கறி, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மஞ்சள்தூளை சேர்த்து குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  5. கடாயில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி, நன்கு வெட்டப்பட்ட வெங்காயத்தை வறுத்து ஊறவைத்த கோழிக்கறியை நன்றாக கலந்து வேகவிடவும். அதன் பின் அரைத்துவைத்தா மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீருடன் சுவைக்கேற்ப உப்பு, புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ளவும். அதனை கலந்து தீயில் சுமார் 15 நிமிடம் அல்லது கோழிக்கறி வேகும் வரை கொதிக்க விடவும்.
  6. இந்த குழம்பை சாதம் அல்லது ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்