வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சால்னா

Photo of Mutton salna by Sibu Thameem at BetterButter
454
4
0.0(0)
0

மட்டன் சால்னா

May-20-2018
Sibu Thameem
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சால்னா செய்முறை பற்றி

மட்டன் சால்னா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன்- 1/4கி
  2. வெங்காயம்- 2
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய்-2
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
  6. இஞ்சி பூண்டு விழுது- 1 1/2 ஸ்பூன்
  7. தேங்காய் பால்- 2கப்
  8. உருளைக்கிழங்கு-2 (துண்டுகளாக நறுக்கியது)
  9. முருங்கைக்காய் - 4 துண்டுகள்
  10. கத்தரிக்காய்-2
  11. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
  12. மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
  13. மட்டன் மசாலா தூள்-3 ஸ்பூன்
  14. கறி மசாலா தூள்- 4 ஸ்பூன்
  15. கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய்- 3 ஸ்பூன்
  18. தண்ணீர்- வேகவைப்பதற்கு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மட்டன் மசாலா தூள், கறி மசாலா தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பின் அதில் மட்டன், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அதனுடன் தேங்காய் பால் , தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. பின்பு ஒரு கொதி வந்ததும் குக்கர் மூடி, விசில் போட்டு நான்கு முறை விசில் வந்ததும் இறக்கவும்.
  5. இறக்கியதும் அதில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்