வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் செஸ்வான் சிக்கன் ப்ரைடு ரைஸ்

Photo of schezwan  chicken fried rice by Vani Vani at BetterButter
556
2
0.0(0)
0

சைனீஸ் செஸ்வான் சிக்கன் ப்ரைடு ரைஸ்

May-20-2018
Vani Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் செஸ்வான் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்த ருசியான ப்ரைடு ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. செஸ்வான் சாஸ் செய்ய :
  2. மிளகாய் வற்றல் - 8
  3. செஸ்வான் மிளகு - 4(இல்லை என்றால் வீட்டில் உள்ள மிளகு பயன்படுத்தவும்)
  4. ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
  5. இஞ்சி துறுவல் - 1/2ஸ்பூன்
  6. பூண்டு நறுக்கியது-1/2 ஸ்பூன்
  7. வெங்காயம் நறுக்கியது-1
  8. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  9. வினிகர் - 1/2ஸ்பூன்
  10. சர்க்கரை - 1/2ஸ்பூன்
  11. உப்பு
  12. தண்ணீர் - 4ஸ்பூன்
  13. ப்ரைடு ரைஸ் செய்ய:
  14. வேக வைத்த பாஸ்மதி அரிசி - 2கப்
  15. போன்லெஸ் சிக்கன் - 250 கிராம்
  16. ஆலிவ் ஆயில் - 1ஸ்பூன்
  17. இஞ்சி துறுவல் - 1/2டீ ஸ்பூன்
  18. பூண்டு நறுக்கியது-1ஸ்பூன்
  19. குடை மிளகாய், வெங்காய தால், கேரட் - 1கப்
  20. உப்பு

வழிமுறைகள்

  1. செஸ்வான் சாஸ் செய்ய :
  2. மிளகாய் வற்றலை வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைத்து பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. அது வதங்கியவுடண் சர்க்கரை, உப்பு, அரைத்த மிளகாய் வற்றல் விழுது, வினிகர், சோயா சாஸ், செஸ்வான் மிளகு, சேர்த்து வதக்கவும்
  6. 4ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியவுடண் தனியாக எடுத்து வைக்கவும்
  7. செஸ்வான் சாஸ் தயார்
  8. பிறகு அதே பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்
  9. சிக்கன் வதங்கியவுடண், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்
  10. பிறகு குடை மிளகாய், வெங்காய தால், கேரட் சேர்த்து வதக்கவும்
  11. அதனுடன் செஸ்வான் சாஸ் சேர்த்து கிளறவும்
  12. பிறகு வேக வைத்த சாதத்தை சேர்த்து உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
  13. செஸ்வான் சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார்
  14. இரண்டு முட்டைகளை உடைத்து ஸ்கிராம்பில்ட் எக் செய்து இதனுடன் பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்