வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Photo of chicken biryani by Vani Vani at BetterButter
603
2
0.0(0)
0

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

May-20-2018
Vani Vani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

மிகவும் ருசியாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி - 2கப்
  2. சிக்கன் - 500 கிராம்
  3. வறுத்த வெங்காயம் - 1கப்
  4. பிரியாணி மசாலா பொடி - 1/2ஸ்பூன்
  5. கொத்தமல்லி இலை நறுக்கிநது- 1 கைப்பிடி
  6. புதினா இலை - 1கைப்பிடி
  7. எண்ணெய்
  8. உப்பு
  9. குங்கும பூ - 5இதழ்
  10. பட்டை - 1
  11. கிராம்பு - 6
  12. ஏலக்காய் - 4
  13. பிரிஞ்சி இலை - 1
  14. சகி ஜீரா-1/2 டீ ஸ்பூன்
  15. அன்னாசி பூ (ஸ்டார் அனீஸ்) - 1
  16. மேரினேட் செய்ய :
  17. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  18. மஞ்சள் பொடி - 1/2டீ ஸ்பூன்
  19. மிளகாய் - 2
  20. தயிர் - 1/2கப்
  21. எழுமிச்சை சாறு - 2ஸ்பூன்
  22. பிரியாணி மசாலா பொடி - 1ஸ்பூன்
  23. மிளகாய் வற்றல் பொடி - 1ஸ்பூன்
  24. ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
  25. உப்பு

வழிமுறைகள்

  1. குங்கும பூவை 2ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்
  2. மேரினேட் செய்ய :
  3. ஒரு பாத்திரத்தில் சிக்கன் சேர்த்து, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது,
  4. மஞ்சள் பொடி, தயிர், எழுமிச்சை சாறு, மிளகாய் வற்றல் பொடி, உப்பு
  5. பிரியாணி மசாலா பொடி, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி 2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்
  6. ஒரு பாத்திரத்தில்( 2 கப் அரிசிக்கு) 5 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் எண்ணெய் பட்டை, கிராம்பு ஏலக்காய், பிரியாணி இலை
  7. உப்பு, சகிஜீரா, ஸ்டார் அனீஸ், சேர்த்து கொதிக்க விடவும்
  8. பிறகு பாஸ்மதி அரிசி சேர்த்து 3/4 பாகம் வேக வைத்து கொள்ளவும்.
  9. பிறகு அடி கனமான பாத்திரத்தில் ஊற வைத்த சிக்கன் வைத்து அதன் மேல் புதினா, கொத்தமல்லி இலை, வறுத்த வெங்காயம் சேர்த்து சமம் செய்யவும்
  10. அதன் மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து சமம் செய்யவும்
  11. மேலே பிரியாணி மசாலா பொடி தூவி பிறகு அதன் மேல் சிக்கன், கொத்தமல்லி இலை, வறுத்த வெங்காயம், புதினா சேர்த்து வைக்கவும்
  12. பிறகு வேக வைத்த அரிசியை வைக்கவும் (லேயர் லேயர் ஆக வைக்கவும்)
  13. பிறகு மேலே குங்கும பூ பாலை ஊற்றவும்
  14. பிறகு அதை மூடி (தம் வைக்கவும்)
  15. அதை 20 நிமிடம் மீடியம் ப்ளெமில் வைத்து எடுக்கவும்
  16. பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்