வீடு / சமையல் குறிப்பு / மட்டன் ரசம்

Photo of Mutton rasam by Priyadharshini Selvam at BetterButter
845
2
0.0(0)
0

மட்டன் ரசம்

May-21-2018
Priyadharshini Selvam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் ரசம் செய்முறை பற்றி

உடலுக்கு வலுவேற்றும் மட்டன் ரசம். சளி காய்ச்சல் சமயத்தில் சூடு சாதத்துடன் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டு எலும்பு 250 கிராம்
  2. பூண்டுப் பல் 4
  3. சாம்பார் வெங்காயம் 50 கிராம்
  4. நல்லெண்ணெய் 1 மேசைக்கரண்டி
  5. சிவப்பு மிளகாய் 2
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  8. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  9. மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
  10. இஞ்சி விழுது 1 தேக்கரண்டி
  11. எலுமிச்சை பழம் 1
  12. கொத்துமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போடவும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
  2. மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.
  3. கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்டு மிளகுத் தூள், சிவப்பு மிளகாய் வற்றல், சீரகத்தூள், பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  4. எழும்புத் துண்டு வெந்த சாற்றை வடித்து எடுத்து தாளித்ததில் ஊற்றி கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
  5. பின்பு அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கலக்கி உபயோகப்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்