வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் ஹலீம்

Photo of Hyderabad Haleem by Asiya Omar at BetterButter
783
3
0.0(0)
0

ஹைதராபாத் ஹலீம்

May-21-2018
Asiya Omar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஹைதராபாத் ஹலீம் செய்முறை பற்றி

பாரம்பரியமிக்க ஹலீம் ஹைதராபாத் உணவு வகையில் மிகவும் முக்கியமானது.சுவையும் அசத்தலானது.பிரசித்தி பெற்ற இப்தார் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • ஈத்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உடைத்த கோதுமை -200 கிராம்
  2. பார்லி -3 மேஜைக்கரண்டி
  3. கடலை பருப்பு -100 கிராம்
  4. மட்டன் -500 கிராம்( கொழுப்புடன் கூடிய மட்டன்)
  5. இஞ்சி பூண்டு விழுது -2 மேஜைக்கரண்டி
  6. வெங்காயம் பொன்னிறமாக பொரிக்க -200 கிராம்
  7. தேவைக்கு எண்ணெய்
  8. நெய் -2 மேஜைக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு
  10. அலங்கரிக்க பொடியாக நறுக்கிய இஞ்சி,மல்லிக்கீரை,எலுமிச்சை துண்டுகள்,வறுத்த
  11. முந்திரி-15
  12. ஹலீம் மசாலாவிற்கு:-
  13. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
  14. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  15. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
  16. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  17. சாட் மசாலா -1 தேக்கரண்டி
  18. கரம் மசாலா -1 தேக்கரண்டி
  19. ( ரெடிமேட் ஹலீம் மசாலா உபயோகிப்பதாய் இருந்தால் 2-3
  20. மேஜைக்கரண்டி சேர்க்கவும்.
  21. தாளிக்க எண்ணெய் சேர்க்கவில்லை,.ஆரோக்கியத்தைக்கருதி.

வழிமுறைகள்

  1. உடைத்த கோதுமை,கடலை பருப்பு,பார்லியை குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் 8-10 கப் தண்ணீர் வைத்து ஊற வைத்தவற்றை 45 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
  3. இதற்கிடையில் இன்னொரு குக்கரில் சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்த மட்டன், ஹலீம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது,உப்பு ,4 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  4. மட்டனில் எலும்பு இருந்தால் வெந்தபின்பு தனியாக எடுத்து கறியை மட்டும் உதிர்த்து வைக்கவும்.
  5. வேகவைத்த கோதுமை,கடலை பருப்பு பார்லி மிக்ஸ் நன்கு மசித்து விடவும்.இத்துடன் வேக வைத்த மட்டன் ஹலீம் மசாலாவுடன் சேர்த்து , நன்கு ஒரு சேர கொதிக்க விடவும்.
  6. வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இஞ்சி,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.விரும்பினால் நெய்யில் முந்திரி 15 தேவைக்கு வறுத்து வைக்கவும்.
  7. தயார் ஆன ஹலீமை ஒரு பவுல் அல்லது தட்டில் எடுத்து பொரித்த வெங்காயம்,மல்லி இலை,இஞ்சித்துருவல் ,வறுத்தமுந்திரி, நெய் ,எலுமிச்சைச்சாறு சிறிது பிழிந்து பரிமாறவும்.
  8. சுவையான ஹைதராபாத் ஹலீம் தயார்.இப்தார் நேரம் இதனை தமிழ் நாட்டில் கஞ்சி சாப்பிடுவது போல ஹைதராபாத்தில் ஹலீம் செய்து பரிமாறுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்