வீடு / சமையல் குறிப்பு / உடைத்த முட்டை குழம்பு

Photo of Egg Gravy by pavumidha arif at BetterButter
1013
5
0.0(0)
0

உடைத்த முட்டை குழம்பு

May-21-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உடைத்த முட்டை குழம்பு செய்முறை பற்றி

தேங்காய் பால் பயன்படுத்தி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 4
  2. சின்ன வெங்காயம் 13
  3. தக்காளி 2
  4. வெந்தயம் 1/2 டீஸ்பூன்
  5. சீரகம் 1 டீஸ்பூன்
  6. புளி தண்ணீர் 1/2 கப்
  7. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  8. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  9. மல்லி தூள் 2 டீஸ்பூன்
  10. தேங்காய் துருவல் 1/2 கப்
  11. வறுத்த வெந்தயம் 1/2 டீஸ்பூன்
  12. வறுத்த சீரகம் 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் புளி தண்ணீர் சேர்த்து தக்காளி பிழிந்து கொள்ளவும்.அதில் உப்பு சேர்த்து கொள்ளவும்
  2. தேங்காய் துருவல், வறுத்த சீரகம், வறுத்த வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
  3. அரைத்த விழுதை புளி கலந்த பாத்திரத்தில் கலந்து கொள்ளவும்.
  4. முட்டை 2 வேக வைத்து லேசாக கீறி கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.பிறகு வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
  6. பின்னர் பாத்திரத்தில் உள்ள புளி தேங்காய் தண்ணீரை ஊற்றவும்.உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
  7. இப்பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறவும்.
  8. குழம்பு நன்கு கொதித்த பின்னர் வேக வைத்த முட்டையை சேர்த்து கொள்ளவும்.
  9. 10 நிமிடம் பின்னர் முட்டையை உடைத்து ஊற்றவும்.கிளற கூடாது.
  10. குழம்பினை மூடி வைத்து 15-25 நிமிடம் சிறு தீயில் கொதிக்க விடவும்.
  11. சுவையான உடைத்த முட்டை குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்