வீடு / சமையல் குறிப்பு / பிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல்

Photo of Piroh (spicy) Nepali aloo dum- street food style by Sabina Saby Tamang at BetterButter
3
13
0(0)
0

பிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல்

May-05-2016
Sabina Saby Tamang
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • అస్సాం / నార్త్ ఈస్ట్
 • వెయించడం/స్టిర్ ఫ్రై
 • ప్రెజర్ కుక్
 • ప్రాథమిక వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. 1/2 கிலோ நடுத்தர அளவு உருளைக்கிழங்கு
 2. கடுகு எண்ணெய்( நல்ல சுவைக்காக); இல்லையென்றல் சாதாரண எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளவும்
 3. 2 டீக்கரண்டி காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள் (தேவையன்றல் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்)
 4. 1 டீக்கரண்டி மிளகாய் விதைகள்
 5. 1 டீக்கரண்டி மஞ்சள்தூள்
 6. ஒரு துளி சிகப்பு உணவுகலர் ( வண்ணதிற்காக மட்டும்)
 7. 1 டீக்கரண்டி கருப்பு சீரகம் (கலோங்கி)
 8. உப்பு
 9. தண்ணீர்

வழிமுறைகள்

 1. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை 3 விசில் வரை அதிக தீயில் வேகவிடவும். (இதற்கு 10 நிமிடங்கள் வரை ஆகலாம்)
 2. உருளைக்கிழங்குகள் வெந்த பிறகு, ஆறுவதற்காக தனியாக வைத்து விடவும். இதற்கு இடையில் உருளைக்கிழங்கு தம்மிர்கான கலவையை தயார் செய்துக் கொள்வோம்.
 3. சின்ன கிண்ணத்தில் காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிகப்பு உணவுகலர், உப்பு மற்றும் தண்ணீர்( கிண்ணத்தின் கால் பங்கு) சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். (இது என் அம்மாவின் தனிப்பட்ட ஆலு தம் கலவை செய்யும் முறை)
 4. ஆலு தம் கலவையைத் தனியாக வைத்துவிடவும். உருளைக்கிழங்கு ஆறியவுடன் அதன் தோள்களை உரித்து நடுத்தரமான சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும்.(உருளைக்கிழங்கை 10-15 நிமிடங்கள் குளிரூட்டியில் வைக்குமாறு நான் பரிந்துரைப்பேன், எனவே அது உறுதியாக இருக்கும்)
 5. இப்போது கடாயி அல்லது பாத்திரத்தில் சூடாக்கி பின்பு அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது சாதாரண எண்ணெய் சேர்த்து சிறிது கருப்பு சீரகமும்(கலோங்கி) சேர்த்து அது வெடிக்க விடவும்.
 6. வெட்டிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை எண்ணெய் மற்றும் கருப்பு சீரகத்தில் கலக்கும் அளவிற்கு லேசாக வறுத்துக்கொள்ளவும்
 7. இப்போது கலவையை உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். அதை நன்கு மூடி கெட்டியாகும் வரை லேசாக கொதிக்கவிடவும்.
 8. இது குழம்பு செய்யும் முறையைப் போன்றது அதனால் இதை முற்றிலும் கெட்டியாக செய்ய வேண்டாம். கடைசியாக அதிகமான காரத்துக்கு மிளகாய் விதைகளை சேர்த்துக் கொள்ளவும். ( இது நானாக சேர்த்துக் கொண்ட கூடுதல் பொருளாகும்.)
 9. இப்போது நன்றாக கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்