வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஷவர்மா

Photo of Chicken Shawarma by Zainab Fazeela at BetterButter
675
3
0.0(0)
0

சிக்கன் ஷவர்மா

May-22-2018
Zainab Fazeela
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஷவர்மா செய்முறை பற்றி

சிக்கன் மற்றும் மைதா பேஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மயோனய்ஸ்:
  2. பூண்டு 4 பல்
  3. முட்டை 2
  4. வினிகர் 2 தே.க
  5. உப்பு தேவைக்கு
  6. எண்ணெய் 400 மில்லி
  7. பேஸ் :
  8. மைதா 4 கப்
  9. ஈஸ்ட் 1 தே.க
  10. முட்டை 1
  11. சீனி 1 தே.க
  12. சிக்கன் கலவை :
  13. போன் லெஸ் சிக்கன் 500 கிராம்
  14. மிளகு 3 தே.க
  15. மயோனய்ஸ் 4 தே.க
  16. இஞ்சி பூண்டு விழுது 1 தே.க
  17. குக்கரில் வேக வைத்து சிக்கனை உதிர்த்து கொள்ளவும்.
  18. காய்கறிகள் :
  19. வெங்காயம் 2 பல்லாரி
  20. கேரட் 3 துருவியது
  21. கோஸ் 150 கிராம்
  22. குடை மிளகாய் 1

வழிமுறைகள்

  1. மயோனய்ஸ் செய்யும் முறை : blender யில் பூண்டு, முட்டை, உப்பு, வினிகர் ஊற்றி நன்கு அரைக்கவும்
  2. நன்றாக அரைத்த பின்பு blender ஓட விட்டே கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றவும்.
  3. நல்ல பேஸ்ட் பதம் வந்தவுடன் blender யை ஆஃப் செய்து ஒரு பவுலில் வைக்கவும்.
  4. மயோனய்ஸ் ரெடி
  5. பேஸ் செய்யும் முறை : பேஸ் செய்ய சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றாக பவுலில் போட்டு தேவைக்கு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  6. இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும்.
  7. பேஸ் தயார்.
  8. ஷவர்மா ஸ்டப்பிங் : நான் ஸ்டிக் பேனில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை வதக்கவும்.
  9. நன்றாக வதங்கியதும் வேக வைத்த சிக்கனை சேர்க்கவும். மயோனய்ஸ் சிறிது எடுத்து கொண்டு மீதியை இதோடு கலந்து கொண்டு. சிறிது மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும்
  10. ஷவர்மா ரோல் செய்யும் முறை : பேஸ் மேலே சிறிது மயோனய்ஸ் தடவி அதன் மேல் சிக்கன் கலவையை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.
  11. ஷவர்மா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்