கோபி மஞ்சூரியன் | Gobhi Manchurian in Tamil

எழுதியவர் Ritu Sharma  |  7th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Gobhi Manchurian by Ritu Sharma at BetterButter
கோபி மஞ்சூரியன்Ritu Sharma
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4344

0

கோபி மஞ்சூரியன் recipe

கோபி மஞ்சூரியன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Gobhi Manchurian in Tamil )

 • தேவையான அளவு எண்ணெய்
 • உப்பும் கருமிளகும் சுவைக்கேற்ற அளவு
 • ஸ்பிரிங் ஆனியன் 1 இன்ச் துண்டுகளாக நறுக்கியது
 • 1/2 தேக்கரண்டி காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி அஜினோமோட்டோ
 • 1 தேக்கரண்டி தக்காளி சாஸ்
 • 1/2 தேக்கரண்டி மிளகாய் சாஸ்
 • 1 தேக்கரண்டி சோயா சாஸ்
 • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • 2 பச்சை மிளகாய் நறுக்கியது
 • 1 குடமிளகாய் பொடியாக நறுக்கியது
 • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
 • 1/2 கப் தண்ணீர்
 • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • 1 தேக்கரண்டி அரிசி மாவு
 • 5 தேக்கரண்டி மைதா
 • 1/2 கப் சோளமாவு
 • 1 காலிபிளவர் சிறுசிறு பூக்களாக நறுக்கப்பட்டது

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி | How to make Gobhi Manchurian in Tamil

 1. பூக்களை நன்றாக அலசிக்கொள்க. பூக்களை கொதிக்கும் நீரில் உப்புடன் போட்டு மிதமானச் சூட்டில் 10-15 நிமிடங்கள் விடவும். கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்க.
 2. மைதான, சோளமாவு, அரிசி மாவு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்துகொள்க. தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அப்போதுதான் கலவை அரை திரவ பதத்திற்கு வரும். அனைத்துப் பூக்களையும் மாவில் போட்டு நன்றாகக் கலந்துகொள்க அல்லது ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கச் செய்யவும். பூக்களைப் பொறித்துக்கொள்க. ஒரு சமயத்தில் கொஞ்சமாக எடுத்து நன்றாக பொன்னிறமாகும் வரையில் வேகவைக்கவும். வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
 3. கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி இஞ்சிப்பூண்டு விழுது, வெங்காயம், காஷ்மீர் சிவப்பு மிளகாய், குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். 3-4 நிமிடங்கள் வதக்கவும். சோயா சாஸ், மிளகாய் சாஸ், அஜினோமோட்டோ, தக்காளி சாஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். உப்பு மிளகுகொண்டு பதப்படுத்தவும்.
 4. வறுத்த பூக்களை சாசில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
 5. ஸ்பிரிங் ஆனியன் பச்சை மிளகாயால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

குழம்பைத் தயாரிக்கச் சிறிது காய்கறி தண்ணீரைச் சேர்க்கவும் அல்லது கெட்டியாகப் பரிமாறவும்.

Reviews for Gobhi Manchurian in tamil (0)