வீடு / சமையல் குறிப்பு / கோபி மஞ்சூரியன்

Photo of Gobhi Manchurian by Ritu Sharma at BetterButter
2646
533
4.7(0)
0

கோபி மஞ்சூரியன்

Aug-07-2015
Ritu Sharma
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 காலிபிளவர் சிறுசிறு பூக்களாக நறுக்கப்பட்டது
  2. 1/2 கப் சோளமாவு
  3. 5 தேக்கரண்டி மைதா
  4. 1 தேக்கரண்டி அரிசி மாவு
  5. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  6. 1/2 கப் தண்ணீர்
  7. 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  8. 1 குடமிளகாய் பொடியாக நறுக்கியது
  9. 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  10. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  11. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  12. 1/2 தேக்கரண்டி மிளகாய் சாஸ்
  13. 1 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  14. 1/2 தேக்கரண்டி அஜினோமோட்டோ
  15. 1/2 தேக்கரண்டி காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள்
  16. ஸ்பிரிங் ஆனியன் 1 இன்ச் துண்டுகளாக நறுக்கியது
  17. உப்பும் கருமிளகும் சுவைக்கேற்ற அளவு
  18. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பூக்களை நன்றாக அலசிக்கொள்க. பூக்களை கொதிக்கும் நீரில் உப்புடன் போட்டு மிதமானச் சூட்டில் 10-15 நிமிடங்கள் விடவும். கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்க.
  2. மைதான, சோளமாவு, அரிசி மாவு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்துகொள்க. தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அப்போதுதான் கலவை அரை திரவ பதத்திற்கு வரும். அனைத்துப் பூக்களையும் மாவில் போட்டு நன்றாகக் கலந்துகொள்க அல்லது ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கச் செய்யவும். பூக்களைப் பொறித்துக்கொள்க. ஒரு சமயத்தில் கொஞ்சமாக எடுத்து நன்றாக பொன்னிறமாகும் வரையில் வேகவைக்கவும். வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  3. கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி இஞ்சிப்பூண்டு விழுது, வெங்காயம், காஷ்மீர் சிவப்பு மிளகாய், குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். 3-4 நிமிடங்கள் வதக்கவும். சோயா சாஸ், மிளகாய் சாஸ், அஜினோமோட்டோ, தக்காளி சாஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். உப்பு மிளகுகொண்டு பதப்படுத்தவும்.
  4. வறுத்த பூக்களை சாசில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  5. ஸ்பிரிங் ஆனியன் பச்சை மிளகாயால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்