வீடு / சமையல் குறிப்பு / உலர் பழ ஸ்மூதி

Photo of Dry fruits smoothie by Nancy Samson at BetterButter
507
2
0.0(0)
0

உலர் பழ ஸ்மூதி

May-23-2018
Nancy Samson
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உலர் பழ ஸ்மூதி செய்முறை பற்றி

உலர் பழங்கள் மற்றும் பொறுப்புகளும் சேர்த்து செய்யும் ஸ்மூதி. இது கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உலர் அத்தி பழம் - 2
  2. உலர் திராட்சை - 10
  3. உலர் செர்ரி - 4
  4. உலர் பெர்ரி - 10
  5. குங்கும பூ - 4 இதழ்கள்
  6. பாதாம் பருப்பு- 4
  7. பிஸ்தா பருப்பு- 4
  8. முந்திரி பருப்பு - 4
  9. வெண்ணிலா ஐஸ் க்ரீம்- 2 கரண்டி
  10. தேன் - தேவையான அளவு
  11. காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள உலர் பழம் மற்றும் பருப்புகளை சூடான பால் அல்லது நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறவைத்த பழங்களையும் பருப்புகளையும் மிக்ஸியில் போட்டு ஒரு கரண்டி வெண்ணிலா ஐஸ் க்ரீம் சேர்த்து மையாக அரைக்கவும்.
  3. இதில் குளிர்ந்த பால் , தேவையான தேன் கலந்து மிக்ஸியில் நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
  4. ஒரு கண்ணாடி கோப்பையில் ஊற்றி பிரிட்ஜ் இல் வைத்து குளிர்ந்ததும் பருகவும்.
  5. மீதமுள்ள ஒரு கரண்டி ஐஸ் கிரீமை மேலே வைத்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்