வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி ரசம்

Photo of Watermelon Rasam by Menaga Sathia at BetterButter
396
2
0.0(0)
0

தர்பூசணி ரசம்

May-24-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி ரசம் செய்முறை பற்றி

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ரசம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தர்பூசணி துண்டுகள் -1 கப்
  2. புளி -எலுமிச்சையளவு
  3. துவரம்பருப்பு வேகவைத்த நீர் -1 கப்
  4. ரசப்பொடி -2 டீஸ்பூன்
  5. உப்பு - தேவைக்கு
  6. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  7. மிளகு -1 டீஸ்பூன்
  8. சீரகம் -1/2 டீஸ்பூன்
  9. கீறிய பச்சைமிளகாய் -2
  10. பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை -1 டேபிள்ஸ்பூன்
  11. கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
  12. தாளிக்க:
  13. நெய் -2 டீஸ்பூன்
  14. கடுகு -1/2 டீஸ்பூன்
  15. பெருங்காயபொடி-1/8 டீஸ்பூன்
  16. நசுக்கிய பூண்டுப்பல் -3
  17. வரமிளகாய்தூள் -1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிளகு சீரகத்தினை கரகரப்பாக பொடிக்கவும்.தர்பூசணியை அரைத்து விதைநீக்கி சாறெடுக்கவும்.
  2. புளியை சுடுநீரில் ஊறவைத்து 2 கப் அளவு கரைக்கவும்.
  3. பாத்திரத்தில் புளிநீர்,உப்பு,மஞ்சள்தூள்,ரசப்பொடி, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்
  4. பச்சை வாசனை அடங்கியதும் பருப்பு நீரை ஊற்றவும்.
  5. 2 நிமிடம் கொதித்ததும் தர்பூசணி சாறினை ஊற்றவும்.
  6. 5 நிமிடங்கள் கொதித்ததும் பொடித்த மிளகு சீரகம்,கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  7. பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்