Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

சின்னம்மை நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

மற்ற பொதுவான தொற்று நோய்களை போல் அல்லாமல் சின்னம்மை நோயானது மிக வேகமாக பரவக் கூடிய ஒரு தொற்றுநோய் ஆகும். உடலிலன் தோல் முழுவதும் சிவப்பு நிற கொப்புளங்கள் தோன்றும். இந்நோய் தாக்கப்பட்டவருடன் தொடர்பு ஏற்படும் பொழுது, அந்த வைரஸானது மிக எளிதாக, விரைவாக தொற்றி பரவுகிறது. அதனால் இந்நோய் தாக்கப்பட்டவரை, அவருடை சிகிச்சை காலம் முடியும் வரை குறைந்தது 2 முதல் 4 வாரங்கள் வரை தனிமை படுத்துவது மிக அவசியம்.     

 

சின்னம்மை நோய்க்கான காரணங்கள்

நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பு வைரஸின் (VZV) மூல தொற்றின் மூலம் இந்நோய் உண்டாகிறது. மனிதர்களை தாக்கும் எட்டு ஹெர்பஸ் வைரஸ்களில் இந்த வைரஸும் ஒன்றாகும். சாதாரண காய்ச்சல், ப்ளூ போல இதுவும் எளிதாக பரவக்கூடிய ஒரு நோய் ஆகும். காற்றில் நெடுநேரம் இது உயிருடன் இருக்காக்கூடியதால், இந்நோய் தாக்கப்பட்டவர் இருமும் பொழுது, தும்மல் ஏற்படும் பொழுதும் எளிதாக பரவுகிறது. மேலும் அவர்கள் உடலில் உள்ள கொப்புளங்களை யாரேனும் தொடும் பொழுது அதில் உள்ள வைரஸ் மூலம் அவர்களையும் தாக்குகிறது.

 

சின்னம்மை நோயின் அறிகுறிகள்

இந்நோய்க்கான அறிகுறிகள் பல இருந்தாலும், இது ஒருவரின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே தாக்கக்கூடிய நோய் என்பதால் சில அறிகுறிகளை அடையாளப்படுத்துவது சிறிது கடினம் ஆகும். இரண்டாவது முறை இந்நோய் தாக்குவது மிக அபூர்வம். மிக சிலரை மட்டுமே இந்நோய் இரு முறை தாக்கியுள்ளது. இந்நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள்:

  1. உடல் சோர்வு, காரணம் தெரியாத உடல் அசதியுடன் கூடிய 102 பாரன்ஹீட் வரையிலான காய்ச்சல்.
  2. உடல் முழுவதும் வேகமாக முதலில் சிவப்பு நிறத் திட்டுக்கள் தோன்றி கொப்புளங்களாக உருமாறும்.
  3. அதிகமாக உடல் அரிப்பு ஏற்பட்டு பழைய கொப்புளங்கள் காயத் தொடங்கும் பொழுது, புதிய கொப்புளங்கள் தோன்றும்.
  4. பசியின்மை இந்நோய்க்கான மிக பொதுவான ஒரு அறிகுறியாகும்.

 

உடலில் ஏற்படும் தடிப்புகள் அடையும் வளர்ச்சி

தடிப்பு – முதலில் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்படும். அதன் தீவிரம் ஒரு உடற்பாகத்திலிருந்து மற்றொரு உடற்பாகத்திற்கு வேறுபடும்.

புள்ளிகள் – தடிப்புகள் மிக விரைவில் புள்ளிகளாக கொத்து கொத்தாக முகம், கைகள், மார்பு, முதுகு, கால்களில் மாறுகின்றன. இப்புள்ளிகள் சிறியதாக இருந்தாலும் அரிப்பை ஏற்படுத்துகின்றன.

கொப்புளங்கள் – இப்புள்ளிகள் அதிகமாக அரிப்பை ஏற்படுத்தும் கொப்புளங்களாக மாறுகின்றன.

உலர்தல் – ஓரிரு தினங்களில் இந்த கொப்புளங்களின் மேற்பாகம் காய்ந்து  உலரத் தொடங்கி விடுகின்றன.

குணமாதல் – கொப்புளங்கள் முழுமையாக காய்ந்து, குணமாக 8 10 நாட்கள் ஆகும். பின் அவை தானாக உதிர்ந்து விடும்.

 

சின்னம்மையும் கர்ப்பகாலமும்

கருவில் உள்ள குழந்தைக்கு இதை பரப்பக் கூடிய ஆபத்து எப்பொழுதும் உண்டு. கர்ப்பக்காலத்தின் முதல் 20 வாரத்திற்குள் இந்த தொற்று ஏற்பட்டால் கருப்பை வார்செல்லா சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இநோய்க்கான தடுப்பு முறைகளை கர்ப்பினி பெண்கள் பின்பற்றுவது மிக அவசியம். ஒருவேளை இந்நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

 

சின்னம்மை நோய்க்கான சிகிச்சை முறைகள்

இந்நோய் தாக்கப்பட்டதை உறுதிசெய்யப்பட்ட பின், அந்த நோயாளிகள் அதற்கான அறிகுறிகளை கையாளும் திறனை அறிந்துக்கொண்டால், வைரஸ் உடலினுள் நுழைவதால் உண்டாகும் அசௌகரியங்களை சமாளிக்கலாம். தொற்று ஏற்பட்ட நோயாளிகள் வீட்டினுள்ளேயே இருந்தால், இந்த வைரஸ் மற்றவருக்கு பரவவிடாமல் தடுக்கலாம். மருத்துவர் அரிப்பினால் உண்டாகும் வேதனையை குறைக்க சில ஆன்டிஇஸ்தமின்கள், களிம்பு போன்றவற்றை அளிக்கலாம். மிதமான சூடு உள்ள நீரில் குளிப்பது, கனமில்லாத லேசான ஆடைகளை உடுத்துவது, லோஷன்கள் தடவுவது போன்றவைகள் மூலமும் இந்த வேதனையை குறைக்கலாம். அதிகமாக நீர் ஆகாரம் உட்கொள்வது மிக அவசியம். குறைவான நீர்,  உடல் வறட்சியை உண்டாக்கும்.

 

சின்னம்மை நோயை தடுப்பது எப்படி?

சின்னம்மை நோயை தடுப்பதற்கு பல தடுப்பு ஊசிகள் இருக்கின்றன. ஒரே ஒரு முறை கொடுக்கப் படும் ஒரு டோஸ் வரிசெலா தடுப்பூசி ஏறக்குறைய 95% மிதமான நோய்களுக்கு தடுப்பூசியாக செயல்படுகிறது.

 

Image Source – Wikimedia Commons, Pixabay, Everyday Health.