உங்கள் மார்பகங்களின் அளவு வசீகரமாக இல்லையா? மற்றவர்களை போல் நீங்களும் உங்கள் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவத்தை பெரிதாக்கும் வழிகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அறுவை சிகிச்சை முதல் எல்லா வழியையும் கண்டிப்பாக யோசித்து வைத்திருப்பீர்கள். ஆனால் நம்புங்கள்! மருந்துகள் உங்களுக்கு எந்த விதத்திலும் இதற்கு உதவப் போவதில்லை. மேலும் அதற்கான பக்க விளைவுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் இங்கு உங்களுக்காக, கத்தியின்றி உங்கள் மார்பகங்களை இயற்கையான முறையில் பெரிதாக்கும் சிறந்த வழிமுறைகளை தருகிறோம்.
1.உணவுத் திட்டம்
முறையான உணவுத் திட்டத்தை பின் பற்றுவதுதான் மிகச் சிறந்த, எளிமையான மற்றும் பாதுகாப்பான வழியாகும். சரியான உணவை உட்கொள்வதன் மூலம் நீங்கள் இயற்கையாக உங்கள் மார்பகங்கள் அளவை பெரிதாக்கலாம். அதிக கொழுப்புள்ள உணவுகள், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமுள்ள பால், சோயா பீன்ஸ், பாலுடன் கூடிய பப்பாளி பழம் போன்ற உணவுகள் அதற்கு உதவும். மார்பு திசுக்கள் கொழுப்புகளால் செய்யப்பட்டதால், கொழுப்பு நிறைந்த உணவுகள் பலன் அளிக்கின்றன.
இந்த உணவுகளை உண்பதால் நீங்கள் சிறிது எடை அதிகரித்து பருமன் ஆகலாம். அதனால் மிக அதிகமாக உண்ணாமல், முறையான சமன் நிலை உணவை உண்ணவும்.
2.உடற்பயிற்சிகள்
ஆம்! உடற்பயிற்சிகள் உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவி மேலும் உங்கள் உடலின் சில உறுப்புகளை நிமிர்த்தி செயல் பட வைக்கிறது. தினசரி, நீங்கள் பொறுமையுடன் செய்யும் உடற்பயிற்சி நாளடைவில் உங்கள் மார்பகங்களை திடமாக்கி உயர்த்துகிறது. நீங்கள் தினமும் உடல் வலிமைக்காக செய்யும் புஷ் அப்ஸ், செஸ்ட் ப்ரெஸ், வால்-புஷ் அப்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் உங்கள் நெஞ்சிற்கு கீழ் இருக்கும் பக்கவாத தசையை செம்மையாக்கி அழகான வடிவத்தை கொடுக்கிறது.
உடற்பயிற்சி செய்யும் முறை
புஷ் அப்ஸ்
உங்கள் கைகள் மற்றும் கால்களால் நின்று இடுப்பை உயர்த்தவும். இப்பொழுது உங்கள் கைகளால் உடலை நேராக வைத்துக் கொண்டு, மெதுவாக தரையை நோக்கி கொண்டுச் செல்லவும். மறுபடியும் உயர்த்தவும், அழுத்தத்தை உங்கள் தோள்பட்டை மற்றும் நெஞ்சு பகுதியில் உணர வேண்டும். இதை 10-12 முறை மூன்று முறை செய்து வித்தியாசத்தை உணருங்கள்!
இதை சரியாக செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்:
பளு தூக்குதல்
உங்கள் நெஞ்சை நல்ல வடிவத்தில் வைத்திருக்க மற்றொரு சிறந்த வழி பளு தூக்கும்பயிற்சி ஆகும். தரையில் படுத்துக்கொண்டு பளுவுடன் கூடிய உங்கள் கைகளை முகத்திற்கு மேலே உயர்த்தவும். பின் மெதுவாக கீழே நிலத்தின் அளவிற்கு கொண்டு வரவும். கவர்ச்சிகரமான மார்பகங்களைப் பெற இந்த பயிற்சியை இரண்டு முறை தினசரி 10-12 முறை செய்யவும்.
இந்த மார்பக பயிற்சி செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்:
இந்த பயிற்சி உங்களுக்கு ஆண்மைத் தனமான தோற்றத்தையும், பருமனையும் தரும் என்று அஞ்சத் தேவையில்லை. ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகவே டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியாவதால் இப்பயிற்சி உங்களை வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க மிக உதவுகிறது.
3)மசாஜ்
உங்கள் மார்பகங்களின் அளவை எந்த மருந்துகளும் இல்லாமல், இயற்கையாக பெரிதாக்கும் மற்றொரு வழி மசாஜ் ஆகும். இதற்கு எந்த பக்க விளைவுகளும் இல்லையாதலால், இதை முயற்சித்து, எந்த அளவுக்கு பலன் தருகிறது என்பதை பார்ப்பது.மிக நல்லது. மார்பை பெரிதாக்க உபயோகிக்கப்படும் எண்ணெய், களிம்புகளுடன், நீங்கள் பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் ஆளி விதைகளையும் உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெய், ஆளிவிதை எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை மசாஜ் கொடுக்க உபயோகிக்கலாம்.
ஆளிவிதை
ஆளிவிதையில் ஃபைடோஎஸ்ட்ரோஜென்கள் என்னும் கூறுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியது. அதை உணவாகவோ அல்லது மசாஜ் செய்யவோ உபயோகிக்கவும்.
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் முற்றிலும் மூலிகை வகையை சார்ந்தது. அதை அரைத்து களிம்பாக்கி எதாவது ஒரு எண்ணெயில் கலந்து உங்கள் மார்பு பகுதிகளுக்கு மசாஜ் கொடுக்கவும்.
வெந்தயம்
மார்பக வளர்ச்சிக்கு மற்றொரு தேர்வு வெந்தயம் ஆகும். இதை அரைத்து ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயுடன் கலந்து உங்கள் மார்பகங்களுக்கு தொடர்ந்து மசாஜ் அளிக்கவும். வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் இருப்பதால், அது மார்பக அளவை அதிகரிக்க உதவும். மசாஜ் செய்வதால் மார்பக அளவு அதிகரிக்கும் என்பதற்கு ஆதாரபூர்வமான சான்றுகள் இல்லையென்றாலும், இந்த மூலிகை மசாஜ் முறைகளை பின்பற்றுவதில் தவறேதும் இல்லை.
4.யோகா
இயற்கையான முறையில் உங்கள் நெஞ்சு பகுதியின் அளவை அதிகரிக்ககூடிய மிகச் சிறந்த வழி யோகாசனம் செய்வது ஆகும். நல்ல பாம்பு, ஒட்டகம், மற்றும் தூவிகோனாசனம் போன்ற ஆசனங்கள் நாளடைவில் உங்கள் மார்பகங்களை நிமிர்த்த மிகவும் உதவுகின்றன. அதை செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்:
ஒட்டக போஸ்-
நாகம் போஸ்-
மற்ற துரித டிப்ஸ்கள் உங்கள் மார்பகங்களை பெரிதாக காட்ட:
- உள்ளே திண்டு வைக்கப்பட்ட பிரா அணிதல்
- இறுக்கமான, லேசான பிராவை தவிர்த்து சரியான அளவில் அணிதல்
- விரிவடைந்து மிகைபடுத்தி காட்டும் தன்மையுடைய துணியிலான பிரா அணிதல்
- உங்கள் தொல்பட்டைகளை நேராக வைத்து நிமிர்ந்து உட்காரவோ நிற்கவோ வேண்டும்.
இயன்றவரை உங்கள் மார்பை பெரிதாக்கக்கூடிய அனைத்து முறைகளும் மேலே கூற பட்டிருந்தாலும், உடனடியாக அதை பெரிதாக்கக் கூடிய நுட்பம் ஏதுமில்லை என்றே கூறலாம். முழுமையான அர்பணிப்பு மற்றும் பொறுமையுடன் மேலே கூறிய வழி முறைகளை பின்பற்றி உங்களுக்கு விருப்பமான அளவை பெறலாம். உங்கள் உடலை நீங்கள் அதற்கு முதலில் காதலிக்க வேண்டும்!
Image source: Pixabay , wikipedia commons, you tube

