Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

காதுகளில் சீழ் வடிவதற்கு சாத்தியமான காரணங்கள்

காதுகளிலிருந்து வெளிவரும் ஒரு வித திரவம் அல்லது நீர்  அல்லது சீழ் ஆகியவற்றை காதில் சீழ் வடிதல் என்றும் மருத்துவ வார்த்தையில் “ ஓடோரியா’ என்றும் சொல்லப்படுகிறது. இயற்கையே காதை பாதுகாக்க, தூசி, துரும்பு உள்ளே புகாமல் இருக்க மெழுகை நம் காதுகளுக்குள் அளித்திருக்கிறது. பல காரணங்களால், சமயங்களில் காதுகளிலிருந்து நிறமற்ற அல்லது வெள்ளை நிற அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர் போன்ற திரவம் வடிகிறது.

 

1.செவிப்பறையில் காயம்

தலையில் மிக கடுமையான உள் காயம், தீவிர அடி ஏற்பட்டால் செவிப்பறை வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் காதுகளிலிருந்து சீழ் வடியலாம். மேலும் செவிப்பறையில் ஏதாவது கீறல்கள் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால் காதிலிருந்து வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் திரவம் வடிகிறது.

 

2.அடிக்கடி காதுகளை சுத்தம் செய்தல்

சிலருக்கு காது மெழுகு உள்ள பகுதியில் உறுத்தல் இருப்பது போல் உணர்வார்கள். அதனால் காதல் அடிக்கடி சுத்தம் செய்துக் கொண்டே இருப்பார்கள். பல சமயங்களில் ஊசி, குறடு, போன்ற அபாயகரமான சாதனைகளை அதற்கு பயன்படுத்துவர். பஞ்சு மொட்டு (காட்டன் பட்) வைத்து குடைவது கூட ஆபத்தானது தான். இதை போன்ற வெளி சாதனங்களை வைத்து குடைந்து காதை சுத்தம் செய்யும் பொழுது காதின் உள்ளே காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் அந்த பஞ்சு காதுக்குள் மாட்டிக் கொண்டு, பாதிப்பை உண்டாக்கி காதில் சீழ் வடிய வைக்கிறது.

 

3.மிக அதிகமான ஒலி நிலையாக கேட்கும் சூழ்நிலை

மிக அதிகமான ஒலியுடைய சத்தங்கள் காதுகளுக்கு நல்லதல்ல. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், கண்டிப்பாக உங்கள் செவிப்பறை பாதிப்படைந்து, திரவம் வெளியேற தொடங்கும்..

 

4.பாக்டீரியா அல்லது வைரல் தொற்று

பாக்டீரியா அல்லது வைரல் தொற்று உங்கள் காதுகளை பாதித்து, சீழ் வடிய காரணமாக இருக்கலாம். இத்தகைய தொற்றுகளான  ஜலதோஷம், அதனால் வாந்தி, காய்ச்சல் போன்றவற்றை புறக்கணித்தால் அந்த தொற்று தொண்டைக்கு பரவுகிறது. அப்படியே காதுகளுக்கும் பரவி, காதில் சீழ் வடிய வைக்கிறது.

 

5.யூஸ்டிக் குழாய் (Eustachian tube)

நம் தொண்டை மற்றும் காது கால்வாயை இணைக்கும் இந்த குழாய், காதில் சரியான அளவு காற்றழுத்ததை பராமரிக்கிறது.அதில் ஏதாவது வீக்கம் இருந்தால், காதின் மத்தியில் திரவம் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் பொழுது, அக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு காதில் இருந்து சீழ் வடிகிறது.

இவற்றை பற்றி நன்கு அறிந்துக் கொண்ட பின் “வரும் முன் காப்பது நலம்”. காதில் சீழ் வடிதலை பற்றிய விழிப்புணர்வுடன், ஏதாவது அசாதரணமாக காதில் நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை நாடவும்.

 

Image source: maxpixel , pexels, Wikimedia Commons, Wikipedia, Health.mil