உங்களின் வயது அதிகரிக்கும் பொழுது, அதன் விளைவுகள் உங்கள் சருமத்தில் தெரியத் தொடங்கும். நீங்கள் உங்கள் சருமத்தின் மேல் முறையான கவனிப்பு செலுத்தவில்லை என்றால், முப்பத்தைந்து வயதிற்கு பிறகு, உங்கள் சருமம் மெதுவாக தொய்வடைய தொடங்கி மெல்லிய கோடுகளும் தெரியத் தொடங்கும். முறையற்ற உணவு பழக்கம், மாசு போன்றவற்றால் முன்னதாகவே வயதானவர் போன்ற தோற்றம் வந்து விடும். இந்த விளைவுகளை குறைக்க சரும நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஆன்டி-ஏஜிங் கிரீம்களை உபயோகித்தால், வெகு காலத்திற்கு உங்கள் சருமம் இளமையானதாக தோற்றம் அளிக்கும்.
1.லக்மே யூத் இன்ஃபினிட்டி ஸ்கின் ஃபர்மிங் சீரம்
இந்த சீரம் பேஷியல் செய்தது போன்ற தோற்றத்தை அளித்து முக சருமத்தின் நெகிழ்ச்சியை தக்க வைக்கிறது. இதை தினசரி உபயோகிப்பதால் உங்கள் சருமத்தை இறுக்கமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
நன்மைகள்:
- உடனடி பொலிவு தருகிறது
- எளிதாக உள்வாங்குகிறது.
- சருமத்தை எண்ணெய் பசை இல்லாமல் ஊட்டமளிக்கிறது.
- எடுத்துச் செல்லுதல் எளிதாக இருக்கிறது..
பாதகம்:
- இதனை உபயோகப்படுத்துவதன் பலன் வெளியே தெரிய நேரமாகிறது.
2.ஓலே ரீஜெனரேடிவ் ரீஜெனரேடிங் கிரீம்
இந்த கிரீம் வறட்சியை எதிர்த்து போராடி, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்கிறது. முகச் சுருக்கம் மற்றும் மெல்லிய கோடுகளை குறைக்கிறது.
நன்மை
- அதிகப்பட்ச எண்ணெய் மற்றும் தூசியை நீக்குகிறது.
- சருமத்தை வெகு நேரத்திற்கு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறது.
பாதகம்
- வலுவான வாசனை
- மிருதுவான, சென்சிடிவ் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் சோடியம் லாரல் சல்பேட் என்ற இரசாயனம் இதில் இருக்கிறது.
3.ஓலே டோட்டல் இஃபெக்ட்ஸ் செவென் இன் ஒன் ஆன்டி ஏஜிங் சீரம்
இது ஒரு வாசனையற்ற கிரீம் ஆகும். உங்கள் சரும நெகிழ்ச்சியை சீராக்கி, திறந்த துளைகளை குறைக்கிறது.
நன்மை
- மாய்ஸ்சரைசர் போல் செயலாற்றுகிறது.
- சருமத்தை மினுமினுப்பாகிறது.
- சருமத்தை உறுதியாக்குகிறது.
பாதகம்
- முழுமையாக இரசாயனங்களால் ஆனது.
4.பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கில்
உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பொருட்கள் நிறைந்து இருக்கும் இந்த கிரீம் சேதமடைந்த உங்கள் சருமத்தை சீராக்கி அணுக்களை மறுஉற்பத்தி செய்கிறது. அதன் கொலாஜன் மற்றும் ப்ரோ செல் காம்ப்ளெக்ஸ் இரண்டே வாரங்களில் வேலை செய்ய தொடங்குகிறது.
நன்மை
- எளிதாக உறிஞ்சப்படுகிறது.
- எல்லாவித சருமத்திற்கும் ஏற்றது.
- நியாயமான விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
பாதகம்:
மிக மிருதுவான சென்சிடிவ் சருமம் உடையவர்களுக்கு லேசான எரிச்சல் உண்டாகலாம்.
5.கார்னியர் ஸ்கின் நாட்சுரல் வ்ரிங்கில் லிப்ட் டே கிரீம்
பாதிப்படைந்த செல்களை சரி செய்வதோடு மட்டுமல்லாமல், புதிய செல்களை உருவாக்கி, சுருக்கங்களை மறைக்க உதவுகிறது.
நன்மை
- சருமத்தின் தன்மையை மேம்படுத்துகிறது.
- கரும் புள்ளிகளை மங்கச் செய்கிறது.
- எளிதாக உறிஞ்சப் படுகிறது.
பாதகம்
- சுருக்கங்களை முழுமையாக நீக்க இயலாது.
6.நியூட்ரோஜினா ஹெல்தி ஸ்கின் ஆன்டி வ்ரிங்கில் நைட் கிரீம்
வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு முழுமையான ஊட்டம் அளிக்கிறது.
நன்மை
- கேடு விளைவிக்கும் இரசாயனம் எதுவும் இல்லை.
- எல்லா விதமான சரும சுருக்கங்களையும் நீக்குகிறது.
- ப்ரீ ராடிகல்களை தடுக்கிறது.
பாதகம்
- வலுவான வாசம் மற்றும் விலை உயர்ந்தது.
Image source: maxpixel , pexels, Wikimedia Commons, Wikipedia, target.com

