Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

உங்கள் இரத்த பிரிவின்படி, உங்களுக்கான சரியான உணவு

மிகச் சில மக்களே அவர்கள் இரத்த பிரிவின்படி சாப்பிடுவது அவர்களை நோயில் இருந்து பல வருடங்களுக்கு விடுவிக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் இரத்தமும் ஒரு தனிப்பட்ட வகையானது மேலும் சில பொருட்களை சாப்பிடுவது ஒருவரின் உடலுக்கு ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தலாம் அதுவே சில பொருட்கள் தீய விளைவை ஏற்படுத்தலாம் என்று  ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த கொள்கையில் நம்பிக்கை வைத்து, அவரவர்களுடைய இரத்த பிரிவின்படி ஒரு நபருக்கு உணவு வழங்கினால், அது ஆரோக்கியமான வகையில் அந்த நபருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நிறைய உணவுமுறை வல்லுநர்கள் நினைக்கிறார்கள்.

தற்போது, டாக்டர். ஏடெமோ ‘ஈட் ரைட் பார் யுவர் டைப்’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார், அதில் இந்த பாடத்தில் அவர் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளைப் பகிர்ந்துள்ளார். ஷிகா சர்மா, இந்தியாவின் புகழ்பெற்ற உணவுமுறை வல்லுநரும், பல்வேறு இரத்த பிரிவுகளின் அறிகுறிகளைப் பற்றியும் மேலும் எந்த வகையான உணவு முறையில் உண்ண வேண்டும் என்பது பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார். ஷிகா சர்மா என்ன சொல்கிறார் என்று நாங்கள் சொல்கிறோம்.

முதலில், ஒருவர் அவர்களுடைய இரத்தம் என்ன வகை என்று கண்டுபிடிக்க வேண்டும் ஏன்னெனில் ஒவ்வொரு பிரிவும் அதன் தனித்தன்மை கொண்டது என்று ஷிகா சொல்கிறார்.

 

1) ‘ஓ’ இரத்தப் பிரிவு

‘ஓ’ பாசிட்டிவ் பிரிவு மக்கள் உடலில் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும், அதனால் தொடர்ச்சியாக மது, சிகரெட் மற்றும் காரமான அத்துடன் சிறந்த உணவு போன்ற அமிலப் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தினால் உடலில் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் மேலும் வாவு, அதிக பசி மற்றும் எடை கூடுதல் போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும்.

பரிந்துரைக்கப்பட்ட உணவு: குறிப்பாக கோடைகாலத்தில்; இந்த இரத்த பிரிவு சற்று அமிலமாக முனைவதால், பார்லி, பிரவுன் ரைஸ், போஹா மற்றும் பல வகையான சாலட்ஸ் போன்ற குளிர்ச்சியான பொருட்கள் அவர்களுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.

 

2) ‘பி’ இரத்தப் பிரிவு

இந்த வகையில் இருக்கும் மக்கள் இனிப்புகளுக்கு சிறப்பு சுவை கொண்டவர்களாக காண்கிறோம். இந்த மக்கள் வழக்கமாக மன அழுத்தத்தின் காரணமாக சாதாரணமானவர்களைவிட பசியுள்ளவர்களாக இருப்பார்கள். உடலில் தண்ணீர் தங்கிக்கொள்ள முனைவதையும் இந்த பிரிவு மக்களில் காண்கிறோம்.

பரிந்துரைக்கப்பட்ட உணவு: பி-பாசிட்டிவ் பிரிவு மக்களுக்கு பருப்புகள் மிக நல்லதாக கருதப்படுகிறது, ஏன்னெனில் ஒரு பருப்பு சார்ந்த உணவு சாப்பிட்டபின் அவர்கள் லேசாகவும் பொருத்தமாகவும் உணருவார்கள். பிரட், மாவுப்பொருள், உருளை அல்லது அரிசி பயன்படுத்துவது அவர்களுக்கு நல்லது அல்ல என்று கருதப்படுகிறது. இங்கே ஒரு புள்ளியை குறித்துக்கொள்ள வேண்டும் என்னவென்றால் தாய் தந்தை இருவரும் பாசிட்டிவ் இல்லை என்றால், மேலும் நீங்கள் ஒரு கலந்த பிரிவு என்றால், பின் நீங்கள் உங்கள் உணவு முறையை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

3) ‘ஏ’ இரத்தப் பிரிவு

இந்த பிரிவின் விசித்திரம் என்னவென்றால் ஒரு தானியம் சார்ந்த உணவு உட்கொண்டால் அவர்களுடைய உடல் அதிக பொருத்தமாகவும் லேசாகவும் இருக்கும், அதுவே இறைச்சி போன்றவை உட்கொண்டபின் அவர்கள் கனமாகவும் மற்றும் அசௌகரியமாக உணர்வார்கள். பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்களும் அவர்களை கனமாகவும் மற்றும் சங்கடமாகவும் உணர வைக்கும்.

பரிந்துரைக்கப்பட்ட உணவு: அவர்கள் அதிகம் போரிட்ஜ், போஹா, பிரவுன் ரைஸ் மற்றும் பாசிப்பருப்பு போன்ற அதிக தானியங்கள் சார்ந்த உணவை உட்கொள்ள வேண்டும். உணவில் ஒரு சிறு இனிப்பு இருப்பது இந்த பிரிவின் மக்களுக்கு தீங்கு இல்லை மற்றும் அது எடை அதிகரிக்காமல் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால் தாய் தந்தை இருவரும் பாசிட்டிவாக இல்லை என்றால், நீங்கள் கலந்த பிரிவைச் சேர்த்தவர்களாக கருதப்படுவீர்கள் மற்றும் ஏ பாசிட்டிவ் பிரிவு திட்டம் முழுவதும் உங்களுக்கு பொருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை ஏன்னெனில் உங்களுக்கு சில மாறுதல்கள் தேவைப்படலாம்.

4) ‘ஏபி’ இரத்தப் பிரிவு

பரிந்துரைக்கப்பட்ட உணவு: “ஏபி” பாசிட்டிவ் பிரிவின் சிறந்தது என்னவென்றால் அவர்கள் தானியம் சார்ந்த உணவிலும் மற்றும் பால் பொருட்கள் சார்ந்தவற்றிலும் சமமாக பயன் அடைவார்கள். ஆனால் துள்ளியமாக உணவை மதிப்பிடுவது மிகவும் முக்கியம். இந்தப் பிரிவின் மக்கள் இட்லி, தோசை, டோக்ளா போன்ற புளித்த உணவுகளுக்கு தனி விருப்பம் கொண்டிருப்பர் ஏன்னெனில் அது லேசாகவும், இந்த வகை உணவு அவர்களுக்கு பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது.

இரத்தப் பிரிவின்படி உணவு என்பது சில ஆராய்ச்சியின் முடிவு மற்றும் மக்கள் இதை முயற்சித்தவர்கள் பாசிட்டிவ் முடிவுகள் கிடைத்திருக்கிறது, ஆனால் இதற்கு இன்னும் விஞ்ஞான படிப்பு தேவைப்படுகிறது. நீங்கள் இந்த மாதிரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் திட்டத்தை உங்கள் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது உணவு முறை நிபுணரிடம் இதை திட்டமிட்டுக்கொள்வது நல்லது, அதனால் நீங்கள் இதன் முழு பயனை அடையலாம்.


படத்தின் ஆதாரங்கள்: பப்ளிக் டொமைன் பிக்சர்ஸ் பிக்ஸாபே, விக்கிமீடியா காமன்ஸ், இஜி.ஆல்.பிஸ், விக்கிபீடியா