Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

கீழ் முதுகு வலிக்கான சிறந்த யோகாசனங்கள்

நீங்கள் கீழ் முதுகு வலியால் அவதி படுகிறீர்களா? அதனால் விரக்தியடைந்து இந்த தீவிர வலியிலிருந்து, மருத்துவரை அணுகாமல்  எப்படி விடுபடுவது என்ற ஆலோசனையில் இருக்கிறீர்களா? கவலை பட வேண்டாம்! இங்கே உங்களுக்காக சில எளிமையான, வீட்டிலேயே செய்யக் கூடிய யோகாசனங்கள் , உங்கள் கீழ் முதுகு வலியை போக்க கூடியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் முதுகு சோர்வடையும் அளவுக்கு ஏதாவது கடினமான வேலையை நீங்கள் செய்பவராயின்,  உங்கள் உடலின் பல நோய்களை இயற்கையாக தீர்க்கக் கூடிய யோகாசனங்களை தினசரி காலை அல்லது மாலை சில நிமிடங்கள் வீட்டில் செய்வது மிகவும் நல்லது.

 

1.பூனை மற்றும் பசு போன்ற போஸ் (மர்ஜரியாசனம் மற்றும் பிட்டிலாசனம்)

இதை நீங்கள் செய்வது எப்படி?

ஓய்வு எடுக்கவோ , முழங்கையை கீழே ஊன்றவோ கூடாது.

நன்மைகள்:

இதை செய்யும் பொழுது முதுகெலும்பு நீட்டப்படும் பொழுது, இடுப்பு பகுதியில் உள்ள வட்டு சுற்றி செலுத்தப்படுகிறது. அதன் மூலம் அந்த இடத்தில் உள்ள அழுத்தம் நீக்கப் படுகிறது. அதனால் மனமும் லேசாகிறது. இந்த ஆசனத்தின் மற்றொரு நன்மை, இது உங்கள் மூச்சையும், உடல் இயக்கத்தையும் ஒருங்கிணைத்து வேலை செய்யப் படுகிறது. இதை பற்றி மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை காண்க:

 

2.முதுகை சுழற்றல் (வக்ராசனம்)

இதை நீங்கள் செய்வது எப்படி?

உங்களுக்கு தீவிர முதுகு வலி இருந்தால் அதிகமாக நீட்டித்து திரும்புவதை தவிர்க்கவும்.

நன்மைகள்:

இந்த நிலையானது முக்கியமாக வயிற்றுபகுதியில் உங்கள் முதுகெலும்புடன் சேரும் இடத்தில் வேலை செய்கிறது. மேலும் உங்கள் கீழ் இடுப்பு பகுதியை இலகுவாக்கி , நீங்கள் மெதுவாக திரும்பி மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றும் பொழுது அழுத்தத்தை குறைக்கிறது. இதைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த காணொளியை காணவும்:

 

3.புறா போன்ற போஸ் (ராஜகபோடாசனம்)

இதை நீங்கள் செய்வது எப்படி?

நீங்கள் மூட்டு வலி உடையவரானால் இதை தவிர்க்கவும்.

நன்மைகள்:

கபோடாசனம் உங்கள் முதுகில் உள்ள விறைப்பு தன்மையை குறைத்து, இடுப்பு எலும்புகளை வலுவுற செய்கிறது. உடல் மற்றும் மனதிற்கு ஓய்வளிக்கிறது.

 

4.குழந்தை போன்ற போஸ் (பாலாசனம்)

இதை நீங்கள் செய்வது எப்படி?

ஓய்வெடுக்கும் இந்த கடைசி நேரத்தில் மூச்சை அடக்குவதை தவிர்க்கவும்.

நன்மைகள்:

இதை ஆசனம், பயிற்சி செய்யும் முழு நேரமும், உங்களுக்கு மூச்சின் மேல் கட்டுப்பாடு தேவை படும் நேரமெல்லாம் செய்யலாம். இது உங்கள் கீழ் முது தசைகளை இலகுவாக்கி, உங்கள் இடுப்பு பகுதி வழியை குறைக்க உதவுகிறது.

 

5.முக்கோண வடிவில் நீட்டுதல் (திரிகோனாசனம்)

இதை நீங்கள் செய்வது எப்படி?

தரையை தொட வேண்டும் என்பதற்காக அதிகமாக குனிய முயற்சி செய்ய வேண்டாம். முடிந்தவரை செய்தால் போதுமானது.

நன்மைகள்:

திரிகோனாசனம் முறையாக செய்தால், அது உங்கள் கால் மற்றும் கீழ் முதுகு தசையை வலுவாக்க உதவுகிறது. மேலும் உங்கள் இடுப்பு மற்றும் முதுகு தசைகளை நீட்டிக்க உதவுகிறது. இப்பாகத்தில் ஏதாவது அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அதை நீக்குகிறது.

Image source: Youtube, Pixabay, Flickr