Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

நாம் கவனத்தில் கொள்ள தவறும் நீரிழிவு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்

கடந்த இருபது ஆண்டுகளில், நீரிழிவு நோய் என்பது மிக சாதாரணமாகி விட்டது. வயோதிகர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர ஆண்  மற்றும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆரம்ப காலங்களில் நீரிழிவு நோய் என்பது வயதானவர்களுக்கு ஒப்பந்தமானதாக இருந்தது. ஆனால், தற்போது குழந்தைகளும் அதனால் பாதிக்கப்படுகின்றனர் . இதற்கு முக்கிய காரணங்கள் பரம்பரையாகவும், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்வதனால் ஏற்படுகிறது.

பொதுவாக நீரிழிவு நோய் உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வின் காரணமாக ஏற்படுகிறது. சர்க்கரை மனித உடலுக்கான ஆற்றலை தருவதற்கு ஆதாரமாக இருக்கிறது மற்றும் இன்சுலின் சர்க்கரையை ஆற்றலாக  மாற்றுவதற்கு உதவுகின்றது. உடலில் உள்ள இன்சுலின் அளவு குறையும் போது  நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நோயாளிகள் நோய்களை தெரிந்து வைத்து கொள்வதில்லை.  ஆனால் அறிகுறிகளை தெரிந்து வைத்து கொண்டால் சிறந்த முறையில் சிகிச்சை எடுத்து கொள்ள முடியும். நீரிழிவு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை நாம் இங்கு பார்பபோம்:

 

1.பசியின்மையை அடிக்கடி உணருதல்:

நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறிகள் அடிக்கடி பசியை உணர்தல். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் போது, மூளை செல்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்க வேண்டும் என்று உடலுக்கு சுட்டிக்காட்டுகிறது. உடலில் இன்சுலின் அளவு குறையும் போது செல்கள் இன்சுலினை உறிஞ்சும் சக்தியை இழந்து மற்றும் ஆற்றல் பற்றாகுறை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இத்தகைய காரணத்தால் நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி பசியை உணர்ந்து சோர்வாகவும் தென்படுகிறார்கள்.

 

2.அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணருதல்:

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, சிறுநீரகம், சிறுநீர்  வடிவில் சர்க்கரையை வெளியேற்றுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இத்தகைய அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

 

3.கைகள், மற்றும் கால்களில் சோர்வாக உணருதல்:

உடலில் கூடுதலான சர்க்கரை இருப்பதால் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கைகள், மற்றும் கால்களில் ஒரு கூச்ச உணர்வு  ஏற்படுகிறது. சில சமயங்களில், ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

 

4.சோர்வாக அடிக்கடி உணர்தல்:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சோர்வாக உணர்வார்கள். ஏனெனில், உணவிலிருந்து பெறப்படும் அனைத்து சக்திகளையும் செல்கள் பயன்படுத்தி கொள்கின்றன. அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றம் கழிவுகளை வெளியேற்றுவதால் உடலில் நீர் மட்டம் குறைந்து சோர்வாக உணருவார்கள்.

 

5.இரத்தம் உரைத்தலில் ஏற்படும் தாமதம்:

இரத்தம்  உறிஞ்சுவதற்கு வழக்கமான நேரத்தை விட அதிகமாக எடுத்து கொண்டால், இது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். நீரிழிவு நோய்  உடலில் நோய் எதிப்பு மண்டலத்தை பாதிப்பதால் காயங்கள் குணமடைய செய்ய நீண்ட காலம் ஆகும்.

 

6.தொடர்ச்சியான பூஞ்சை தொற்று

நீரிழிவு நோயாளிகளுக்கு பூஞ்சை தொற்றுநோய் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, விரல்கள், பிறப்புறுப்புகள், மார்புகளுக்கு இடையில் ஈஸ்ட் மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு .

 

7.பலவீனமான கண்கள்:

உடலின் உள்ள திரவங்களில் ஒழுங்கற்ற ஓட்டத்தினால்  கண்களில் வீக்கம் ஏற்பட்டு, ஒருவரது பார்வை பலவீனம் அடைகிறது. மேலும் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்  போது, லென்சுகளின் பலத்தை பாதித்து கண்களின் கருவிழியில் தோற்றத்தை மாற்றுகிறது.

மேற்கண்ட அறிகுறிகள் உட்பட நீரிழிவு நோயாளிகள் வாய் வறட்சி, நோய் மற்றும் தொற்று நோய்களை குணப்படுத்துவதில் தாமதம், திடீரென எடை குறைவு, ஈறுகளில் வீக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் உணர்வு போன்ற அறிகுறிகளினால் பாதிக்கப்படுகிறார்கள்.

மேற்கண்ட அறிகுறிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஒருவர் நீண்ட காலமாக உணர்ந்து இருந்தால் அவர்களின் சர்க்கரை அளவை சோதிப்பது நல்லது.

 

ImageSource: www.wpafb।.af.mil www.mimangagastrica.com www.flickr.com, www.pxhere.com , www.maxpixel.com ,wikimedia