திடீரென்று, பரபரப்பான ஒரு நாளின் மத்தியில் எதிலும் நாட்டம் இல்லாமல், சோர்வாக இருப்பது போல் உணர்கிறீர்களா? மோசமான மனநிலையில் இருபது போல் உள்ளதா? ஒருவேளை நீங்கள் மன அழுத்தம், மன சோர்வு, மன உளைச்சல் அல்லது பட்ட சீர்குலைவு (anxiety disorder) போன்றவற்றை அனுபவிப்பவராயின், உங்களுக்கான தீர்வு – உணவு! ஆம், சரியான, முறையான உணவு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்யத்தையும் கொடுக்கிறது. அதனால் அடுத்த முறை நீங்கள் உங்கள் சோர்வடைந்த மன நிலையுடன் போராடும் பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உண்டு மீண்டும் நல்ல மன நிலைக்கு திரும்பவும்!
1.டார்க் சாக்லேட்
யாருக்குதான் சாலேட் பிடிக்காது? அது உங்கள் மன நிலையை உற்சாகப்படுத்த வல்லது என்பதால், அனைவருக்கும் சாக்லேட் மிக விருப்பமானது. மேலும் என்னவென்றால், ஆராய்ச்சிகள் உங்களுக்கு சாதகமானதை தான் கூறுகிறது. தினசரி ஒரு துண்டு டார்க் சாக்லேட் உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதாக கூறுகிறது. அதனால் அடுத்தமுறை உங்கள் மன நிலை சோர்வடையும் பொழுது ஒரு துண்டு டார்க் சாக்லேட் எடுத்து உண்டு மகிழுங்கள். நீங்கள் உணவில் டயட் பின்பற்றிக் கொண்டிருப்பவராயின் அதன் கலோரிகளின் மேல் கவனம் கொள்ளவும்.
2.ப்ரெஷ் பழங்கள்
ஆரஞ்சு, வாழைபழம், கொய்யா பழம் , ஆப்பிள் , மாம்பழம் போன்ற பழங்கள் மிக்க சுவையானவை மட்டுமல்ல, இயற்கையாகவே இனிப்பானவையும் கூட. இப்பழங்களை உண்பதால், அதிலுள்ள நார்ச்சத்து, விட்டமின் C, தாதுக்கள் போன்றவற்றால் உடனடியாக உங்கள் மனநிலை நன்கு உயர்த்தப்படுகிறது. தேவையான அளவு பழங்களை உண்டு வித்தியாசத்தை உணருங்கள்!
3.முட்டைகள்
தினசரி உங்கள் காலை உணவில் ஒரு முட்டையை உடைத்து சேர்த்துக் கொண்டால் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் உணரலாம். ஒரு முட்டையில் அதிகமான ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் A, D, E போன்றவைகளும், இரும்புச்சத்து, கால்ஷியம், சிங்க் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. அதனால் சந்தேகமேயில்லாமல் முட்டை உங்கள் மனநிலை ஆரோக்யத்தை உயர்த்துகிறது.
4.மீன்
சதை பற்றுள்ள மீன்களான சூரை மீன், காளா மீன் போன்றவைகள் மூளையுடன் சம்பந்தப்பட்ட இரசாயனங்களில் மாற்றங்களை உண்டு பண்ண உதவுகின்றன. இது மன நிலை மாற்றத்திற்கு பெரிதும் வழிவகுக்கிறது. இதற்கு காரணம், அதில் நிறைந்துள்ள ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் ஆகும். இது மன சோர்வு மற்றும் ஆழ்ந்த மன அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.
5.நட்ஸ்
பாதாம், வாதுமை கொட்டை (hazle nut) போன்றவை கண்டிப்பாக நீங்கள் சோர்வடியும் சமயம் உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன. நார்ச்சத்துகள் நிறைந்த இவை உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உங்கள் கைப்பையில் எப்பொழுதும் சிறிது நட்ஸ்களை வைத்திருந்தால், ஒரு கோப்பை காப்பி அருந்துவதற்கு பதில் நீங்கள் இந்த நட்ஸ்களை உண்ணலாமே!
6.லென்டில்ஸ் எனும் அவரை பருப்பு வகைகள்
உங்கள் மதிய உணவில் பருப்புகளை சேர்த்துக் கொள்வதால் உங்களின் ஆற்றல் அளவு அதிகரித்து அன்றைய மீதி நாளுக்கு தேவையான சக்தியை தருகிறது. மேலும் பிற்பகல் ஏற்படும் மன சோர்வு, மன உளைச்சல் ஆகியவற்றை தவிர்த்து உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கிறது.
7.கிரீன் டீ
உங்கள் ஆற்றல் அளவு குறைந்திருப்பதை நீங்கள் உணர்ந்தால், ஒரு கப் தேநீரை அருந்தினால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்? சொர்கத்தில் இருப்பதை போல் உணர்வீர்கள் அல்லவா! அது கிரீன் டீயாக இருந்தால் உங்களுக்கு அதிக பயனை அளிக்கும். அதில் உள்ள ஆன்டிஆகிஸிடன்ட்கள், ஊட்டச்சத்துக்கள், போன்றவை உங்கல் மன நிலையை ஊக்கப்படுத்தும். கிரீன் டீயில் உள்ள சிறிய அளவிலான காஃபின் உங்கள் மனச் சோர்வுக்கு உடனடி நிவாரணியாக செயல்படுகிறது.
உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்தும் வேறு சில உணவுகள்:
- ஆளிவிதைகளை உங்கள் சாலட், மோர் அல்லது வேறு பானங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
- பசலைக் கீரை மற்றும் கேல் போன்ற பச்சை கீரை வகைகள்
- சமையலில் தேங்காய் எண்ணெய் உபயோகப் படுத்துதல்
Image source: Max Pixel, Flickr, Pixabay, Canva

