Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

முகப் பருக்களை இயற்கையாக குணப்படுத்துவது எப்படி என்று கூறுகிறார் ஷானாஸ் ஹுசைன் !

பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் முகப் பருக்கள் ஆகும். உங்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றால், தங்களுக்கு பிடித்த சாக்லேட் சாப்பிடுவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பவரையும், சாக்லேட் சுவைத்தப்பின் பயந்தபடியே முகத்தை பார்ப்பவரையும் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் பல வகையான உணவுகளை உண்ணவே அச்சப் படுவார்கள். அவை முகத்தை அழகின்றி ஆக்குவதுடன் வலியையும் தருகின்றன.

இன்று பெட்டர் பட்டர் உங்களுக்காக பிரபல சரும மற்றும் அழகுகலை நிபுணர் ஷானாஸ் ஹுசைன் பருக்களை விரட்ட அளிக்கும் டிப்ஸ்கள் இதோ:

 

1.ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட்

எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்களுக்கு அதிகம் பருக்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. அதனால் சருமத்தில் எண்ணெய் பசை ஏற்படுவதை தவிர்ப்பது அவசியம். தினசரி இருமுறையாவது முகத்தை நல்ல தரமான பேஸ் வாஷ் (Face Wash) கொண்டு கழுவ வேண்டும் என்கிறார் ஷானாஸ் உசைன். முகத்திற்கு ரோஸ் வாட்டரை கீழே கூறியபடி உபயோகப்படுத்தவும்:

 

2.மஞ்சள் மற்றும் தயிர்

மஞ்சள், தயிர் இரண்டுமே மருத்துவ மற்றும் காயங்களை குணமாக்கும் தன்மைகள் உடையது. அவை பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். வற்றை உபயோகிக்கும் முறை :

 

3.சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ்ட்

சந்தனத்திற்கு  வலியை குறைக்கும் தன்மையும் பரு மற்றும் மாசுவை நீக்கும் சக்தியும் உண்டு. அதை பின் வருமாறு உபயோகிக்கவும்:

 

4.வேப்பிலை

வேப்பிலை உங்களுக்கு தூய்மையான, அப்பழுக்கற்ற சருமத்தை அளிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அதை உபயோகிக்கும் முறை:

 

5.வெள்ளரி சாறு

வெள்ளரிசாறு முகத்தில் சுரக்கும் எண்ணெய் பசையை கட்டுபடுத்துகிறது. அதன் குளிர்ச்சி தன்மை உங்கள் சருமத்தை குளிர்வித்து ஈரத்தன்மை அளிக்கிறது. அதை உபயோகிக்கும் முறை:

 

மேற்கூறிய குறிப்புகளுடன், ஷானாஸ் ஹுசைன் நம் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில டிப்ஸ்களையும் அளிக்கிறார்:

  1. நிறைய நீர் அருந்துங்கள்.
  2. உடல் தூய்மை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு உங்கள் முக தூய்மையும் அவசியம்.
  3. மன அழுத்தமும் பருக்களை உண்டாக்கும் என்பதால், மன அழுத்ததிலிருந்து விலகி இருங்கள்.
  4. துரித உணவு / ஜங்க் உணவை தவிர்த்து விடுங்கள்.

 

Click below to see Shahnaz Husain’s complete video: 

Image Source: MEDICAL NEWS TODAY, THE NORTHWEST SCHOOL OF AROMATIC MEDICINE, STYLECRAZE,YOUTUBE.