Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

மார்பக அளவை இயற்கையாக குறைப்பது எப்படி?

பெண்களின் மார்பகங்கள் அவர்களின் ஆயுள் காலம் முழுவதும் அளவில் வேறுபட்டு கொண்டே இருக்கும். பிரசவத்திற்கு பிறகு, பெண்களின் மார்பகங்கள் விரிவடைவது வழக்கம். மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, சில மருந்துகள் போன்றவற்றால் மார்பகங்கள் பெரிதாகின்றன. தங்களுக்கு பொருத்தமான சிக்கென்ற ஆடைகளை அணிய பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பு அளவை குறைக்க விரும்புகின்றனர்.  இங்கே சில எளிமையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி வித்தியாசத்தை உணருங்கள்.

 

1.மசாஜ்

மார்பகங்கள் அளவை குறைக்க மசாஜ் ஒரு சிறந்த வழி ஆகும். அடிபோஸ் எனப்படும் கொழுப்பு திசு மசாஜ் கொடுக்கும் பொழுது தூண்டப்பட்டு நல்ல பலனை அளிக்கிறது.

செய்முறை:

 

2.கிரீன் டீ

கிரீன் டீ ஆன்டியாக்சிடன்ட்கள் நிறைந்தது. அது உங்கள் உடல் முழுவதும்  வளர்சிதை மாற்ற விகிதத்தை, கடின கொழுப்புகளை உடைத்து உயர்த்துகிறது, அதனால் உங்கள் மார்பக அளவுகளை குறைக்க மற்றொரு சிறந்த வழி இந்த கிரீன் டீ.

 

3.உணவு திட்டம்

உங்கள் மார்பகங்களின் அளவை குறைப்பதில் நீங்கள் பின்பற்றும் உணவுத் திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு கொழுப்பு சத்து, உப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். கொழுப்புகளை கரைக்க பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உதவுவதால், அவற்றை அதிகமாக உண்ணவும். இல்லையென்றால் உங்கள் உடலில் கொழுப்பு சேர்ந்து, மார்பகங்களை பெரிதாக காட்டும்.

 

4.காபி

காபி பிரியர்களுக்கான நற்செய்தி! ஆம், காஃபின் மார்பகங்களின் அளவை குறைக்க உதவுகிறது. ஊட்டசத்துக்களை உள்வாங்கிக் கொள்வதை காஃபின் சிறிதளவில் குறுக்கீடு செய்வதால், மார்பகங்களில் கொழுப்பு படிவதை கட்டுப்படுத்துகிறது. மார்பின் அளவு எளிதாக குறைகிறது. அதனால் தினமும் காபி அருந்துங்கள்.

 

5.யோகா

மார்பகங்களின் அளவை குறைக்கக்கூடிய ஆசனங்கள் நிறைய உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தினசரி இருமுறை அவற்றை பின்பற்ற வேண்டியதுதான்.

 

 

படத்தில் காட்டிய நிலையில் இருந்தவாறு, மெதுவாக உங்கள் உடலை திருப்பவும். இந்த மென்மையான            திருப்பம் செய்யும் பொழுது உங்கள் உடலின் மேல் பகுதியில், மார்பை சுற்றி நீங்கள் இழுப்பது போல் உணர்வீர்கள். இந்நிலயில் சில வினாடிகள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு செல்லவும்.

அதை செய்யும் முறை அறிய கீழ் காணும் காணொளியை கிளிக் செய்யவும்:

 

 

6.உடற்பயிற்சிகள்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன.

 

ஜாகிங் உங்கள் உடல் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒரு சரியான கார்டியோ பயிற்சியாகும். தினசரி 20-30 நிமிடங்கள் ஓட்டம், சைக்கிள் ஓட்டுவது, ஜாகிங், ஜம்பிங் ஜாக்ஸ் போன்ற கார்டியோ பயிற்சிகள் செய்வதால் உங்கள் மார்பகங்களின் அளவு குறைகிறது.

 

 

மேலே உள்ள படத்தையும், கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியையும் பார்த்து இப்பயிற்சியை செய்யவும்.

 

 

 

உங்கள் மார்பகங்களின் அளவை குறைக்க உதவும் வேறு சில வழி முறைகள்:

Image source – Wikipedia commons, Pixabay , Flickr , You tube , Yoga Journal