Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

குளிர் காலத்தில் யோகா செய்வதனால் உண்டாகும் பயன்கள்

இந்தியாவின் பழமையான உடற்பயிற்சி வகைகளில் ஒன்று இந்த யோகாசனம் ஆகும். நம் நாட்டில் இது வெகுகாலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை போல அல்லாமல் யோகா உடல், உள்ளம், ஆன்மிகம் போன்ற அனைத்திலும் கவனம் செலுத்தி ஒருவரின் ஒட்டு மொத்த ஆரோக்யத்திற்கு வழி வகுக்கிறது.

வருடம் முழுவதும் யோகா செய்யலாம் என்றாலும், குளிர்காலத்தில் செய்யப்படும் பொழுது அதற்கு சில சிறந்த பயன்கள் உண்டு.

 

1.மூட்டு வலியை சமாளிக்க உதவுகிறது

ஜில்லென்ற குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிக்கிறது. வின்யாசனா என்று சொல்லப்படும் மூச்சு பயிற்சியுடன் சேர்ந்து செய்யப்படும் யோகாசனம் உங்கள் மூட்டுகளுக்கு இயக்கம் அளித்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டுகளின் விறைப்புத் தன்மையையும் குறைக்கிறது. வலியை குறைக்க ஒரு சிறந்த வழி வெப்பம் ஆகும். யோகா செய்யும் பொழுது சூடு உற்பத்தி செய்யப்பட்டு உடலும் சூடாகிறது. இந்த சூடு உடலில் உள்ள தசைகளை தளர்த்தி, வலியை குறைக்கிறது.

 

2.நுரையீரலை பாதுகாக்கிறது

யோகாவின் ஒரு முக்கிய அங்கம் மூச்சு பயிற்சி ஆகும். நாசி வழியே மூச்சு காற்று உள்ளிழுத்து, வெளியேற்ற படுகிறது. நாசி வழியே உள்ளே இழுக்கப்பட்ட குளிர்ந்த காற்று நுரையீரலுக்கு செல்லும் பொழுது சூடாகிறது.

நீண்ட குறுக்கிய பள்ளங்களாக இருக்கும் மூச்சு குழாயில் நுரையீரலுக்கு செல்லுமுன் வடிகட்ட படுகிறது. சுவாச அமைப்பை உறுத்தும் ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் நுரையீரலை பாதுகாக்கிறது. கபாலபாதி, பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் உங்கள் நுரையீரலை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் சுவாச அமைப்பிற்கும், நரம்பு மண்டலத்திற்கும் உள்ள உறவை வலுபெற வைக்கிறது.

 

3.இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்தை புதுப்பிக்கிறது

சருமம் முறையாக உடலின் மற்ற உள்ளுறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல் போன்றவற்றுடன் இணைந்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்று கொண்டிருக்கிறது. மதியான நேர வெப்பம், குளிர்ந்த காற்று மற்றும் ஈரப்பதம் இவை அனைத்தும் சேர்ந்து சருமத்தை வறட்சியாக்கி, நீர் பதத்தை குறைத்து விடும்.

இந்த நேரத்தில் யோகா செய்தால் அதன் மூலம் உடலில் வியர்வை உண்டாகும். அதனால் இயற்கையாக உடலில் உள்ள துளைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால் சருமம் ஈரப்பதம் அடைகிறது. அதனால் சருமம் மிருதுவாகிறது. உடல் வியர்ப்பதால் உடல் சற்று கடினமாக உழைத்தால் தான் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற முடியும். அதனால் இரத்த ஓட்டம், இதய மற்றும் சுவாச அமைப்பின் செயல்பாடு அதிகரித்து உடல் எடையை பராமரிக்கவும் உதவி செய்கிறது.

 

4.மன அழுத்தத்தை தளர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில், ஹைபோதாலமஸ் கார்டிசோல் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் மன அழுத்த சூழ்நிலைகளில் உடலை எச்சரிக்கை படுத்தி நோய்எதிர்ப்பு அமைப்பை முறை படுத்துகிறது. கார்டிசோல் அதிகமாக இருந்தால் நோய் எதிர்ப்பு அமைப்பு குறைந்து அடிக்கடி தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது. உங்களை சுறுசுறுப்பாக வைப்பதோடு மட்டுமல்லாமல், யோகா உடலுக்கு புத்துணர்வையும் தருகிறது. உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பொழுது நோயெதிர்ப்பு அமைப்பும் சிறப்பாக செயல்பட்டு நம்மை தாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை தாக்குகிறது.

 

5.உங்கள் மன நிலையை உயர்த்த உதவுகிறது

குளிர்காலங்களில் நாம் பொதுவாக SAD என்னும் பருவக்கால பாதிப்பு குறைபாடால் அவதிபடுவது இயல்பு. இந்த பாதிப்பை ஆங்கிலத்தில் விண்டர் ப்ளூ (winter blue) என்று கூறுவதுண்டு. அந்த மாதிரி சமயங்களில் சோர்வான மனநிலை, அதிக பசி, குறைந்த ஆற்றல் அளவு, அதிக தூக்கம் போன்றவை ஏற்படுவதுண்டு. குறைந்த பகல் நேரமே குளிர்காலங்களில் இருப்பதால், குறைந்த சூரிய வெளிச்சமே கிடைக்கிறது.

இந்த காலங்களில் குறைந்த ஆற்றலை ஈடு செய்ய யோகவே சிறந்த வழியாகும். காலை நேர யோகா பயிற்சி செய்யும் பொழுது அதில் சூரிய நமஸ்காரமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் உடலை வெப்பமாக்குவதொடு மட்டுமல்லாமல் இதயத்தின் செயல்பாடு மற்றும் சுவாச அமைப்பின் செயல்பாடு இரண்டின் செயல்பாட்டையும் இணைத்து மேம்படுத்துகிறது. அதனால் உங்கள் மனநிலை உயர்த்தப்பட்டு, ஆற்றல் மிக்கவராக செயல்பட உதவி செய்கிறது.

அதனால் காலி உங்களுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி எளிமையான யோகாசன பயிற்சிகள், மூச்சு பயிற்சி போன்றவற்றை செய்யவும். இது உங்களின் உடல் எடையை ஆரோக்யமாக பராமரிக்க உதவுவதோடு உங்கள் உடலை தொற்று நோய்களிலிருந்து இந்த குளிர் காலங்களில் காப்பாருகிறது.