Home / Recipes / Cheesy Mushroom Fry

Photo of Cheesy Mushroom Fry by Ayesha Ziana at BetterButter
1039
3
0.0(0)
0

Cheesy Mushroom Fry

Nov-17-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
4 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. காளான் 10
  2. டூத்பிக் 10
  3. கோதுமைபிரட் க்ரம்ஸ் 1 கப் அல்லது தேவைக்கு
  4. பொரிக்க எண்ணெய்
  5. ஸ்டப்பிங் செய்ய: துருவிய செட்டார் சீஸ் 1/2 கப்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கு
  9. மாவுக்கு: சோள மாவு 1/2 கப்
  10. கோதுமை மாவு 2 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  12. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  13. உப்பு தேவைக்கு

Instructions

  1. ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒரு பவுலில் கலந்து வைக்கவும்.
  2. மாவு செய்யக் கொடுத்துள்ளவற்றைக் கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்கவும்.
  3. காளானைக் கழுவி நன்றாக துடைத்து விட்டு, பின்னர் அவற்றின் தண்டுகளை நீக்கி விட வேண்டும்.
  4. ஒவ்வொரு காளான் நடுவிலும் ஸ்டப்பிங் வைத்து அடைக்கவும்.
  5. 2 காளான்களை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஸ்டப்பிங் பக்கமாக சேர்த்து வைக்கவும். 2 காளான்களின் இரு ஓரங்களிலும் சேர்த்து டூத்பிக் சொருகவும். இப்படியே எல்லா காளான்களையும் இரண்டு இரண்டாக சேர்த்து சொருகி வைக்கவும்.
  6. ஒரு காளான் ஜோடி எடுத்து, அதை மாவில் முக்கி, பிரட் கிறம்சில் போட்டு பிரட்டி வைக்கவும். இப்படியே எல்லா காளான் ஜோடிகளையும் செய்த பின்னர், அவற்றை பிரிட்ஜில் 1/2 முதல் 1 மணி நேரம் வரை வைக்கவும். (பிரிட்ஜில் வைக்காமல் உடனே கூட பொரிக்கலாம். ஆனால் சில சமயம் பிரட் க்ரம்ஸ் உதிர்ந்து விடக் கூடும்).
  7. பின்னர், மிக சூடான எண்ணெயில் ஒவ்வொரு காளான் ஜோடியையும் போட்டு 5 விநாடிகளுக்குள் இரு பக்கங்களையும் பொரித்து எடுக்கவும். சிறிது அதிக நேரம் பொரித்தாலும் உள்ளே ஸ்டப்பிங் வைத்த சீஸ் உருக தொடங்கி விடும். எனவே கவனமாக செய்யவும்.
  8. அருமையான சீஸி காளான் ப்ரை தயார். காளான் வளரும் குழந்தைகளுக்கு பலவிதமான சத்துகளைக் கொடுக்க வல்லது. எனவே 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுத்து வரலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE