Home / Recipes / Crunchy stuffed ivy gourd

Photo of Crunchy stuffed ivy gourd by Rajeswari Annamalai at BetterButter
442
3
0.0(0)
0

Crunchy stuffed ivy gourd

Nov-18-2017
Rajeswari Annamalai
1 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crunchy stuffed ivy gourd RECIPE

கோவைக்காய் உடம்பிற்கு நல்லது. ஆனால் இதை விரும்பி உண்ணும் குழந்தைகள் சிலரே. இவ்வாறு செய்து பரிமாறவும், வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் கூட வேண்டும் என்பார்கள். என் வீட்டில் ஏற்பட்ட அனுபவம்! இந்த ரெசிப்பியை ஷேலோ ஃப்ரை அல்லது பேக்கிங் செய்யலாம்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Shallow fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. 1/4 கிலோ கோவைக்காய்
  2. 1 மேஜைக்கரண்டி வறுத்த வேர்க்கடலை
  3. மசாலா:
  4. 1/4 தேக்கரண்டியளவு சீரகம்
  5. 1/8 தேக்கரண்டியளவு கடுகு
  6. சிறு நெல்லி அளவு புளி
  7. 1/2 தேக்கரண்டியளவு பச்சை அரிசி
  8. 1/2 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு
  9. 1/2 மேஜைக்கரண்டி உளுந்து
  10. 1/2 மேஜைக்கரண்டி தனியா
  11. 5 காய்ந்த மிளகாய்
  12. 1/2 மேஜைக்கரண்டி எள்
  13. 1/2 தேக்கரண்டியளவு மிளகு
  14. மற்றவை:
  15. எண்ணெய் தேவையான அளவு
  16. 1/8 கப் துருவிய தேங்காய்
  17. 1/8 தேக்கரண்டியளவு மஞ்சள் தூள்
  18. உப்பு தேவையான அளவு
  19. அலங்கரிக்க:
  20. நறுக்கிய வெங்காயம்
  21. எலுமிச்சை
  22. கொத்தமல்லி தழை
  23. கருவேப்பிலை தேவைப்பட்டால்

Instructions

  1. மசாலாவில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாய் சேர்த்து ட்ரை ரோஸ்ட் செய்து ஆரவிடவும்
  2. ஆரியவுடன் வேர்கடலை, தேங்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நீர் விட்டு மையாக அரைத்து கொள்ளவும்
  3. கோவைக்காயை அலம்பி துணியை வைத்து துடைத்து, பிளவு செய்து மசாலாவை ஸ்டஃப் செய்யவும்
  4. 15 - 30 நிமிடங்களுக்கு ஊற விடவும்
  5. பானில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஷேலோ ஃப்ரை செய்து எல்லா பக்கங்களிலும் வேகவைத்து கொள்ளவும் (மூடி வைத்து வேக விடவும்)
  6. வெங்காயம், கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை துண்டு உடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE