Home / Recipes / Mushroom Briyani

Photo of Mushroom Briyani by Asiya Omar at BetterButter
676
7
0.0(0)
0

Mushroom Briyani

Nov-23-2017
Asiya Omar
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mushroom Briyani RECIPE

காளானில் பிரியாணி செய்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அதீதம் தான்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 4

  1. பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
  2. பிரியாணி அரிசி -400 கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது -1 மேஜைக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 100 கிராம்
  5. பெரிய தக்காளி -100 கிராம்
  6. மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
  7. பிரியாணி மசாலா -2 தேக்கரண்டி (விரும்பினால்)
  8. கரம் மசாலா -அரை தேக்கரண்ட அல்லது
  9. முழுதாக ஏலம்,கிராம்பு -தலா 2,பட்டை -ஒரு துண்டு
  10. நான் பொடியே சேர்த்தேன்.
  11. மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
  12. மல்லி,புதினா - தலா ஒரு கைப்பிடி
  13. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  14. எலுமிச்சை -பாதி பழம்
  15. உப்பு -தேவைக்கு
  16. எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
  17. நெய் -2 மேஜைக்கரண்ட.ி

Instructions

  1. அரிசியை முதலில் களைந்து ஊற வைக்கவும். காளானை அலசி துடைத்து நறுக்கி வைக்கவும்.
  2. நறுக்க வேண்டியவைகளை நறுக்கி,தக்காளி மட்டும் அரைத்து வைக்கவும்.
  3. ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.லேசாக சிவந்து வரும்பொழுது இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.மல்லி,புதினா, தக்காளி கூழ், மிளகாய் சேர்க்கவும்.உப்பு தேவைக்கு சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு மசிந்ததும் மசாலா வகைகள் சேர்க்கவும்.
  5. நன்கு பிரட்டி தயிர் சேர்க்கவும்.
  6. கலந்து விடவும்.நறுக்கிய காளான் சேர்க்கவும்.சிறிது நேரம் இருக்கட்டும்.
  7. இரண்டு அளவு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.கொதி வரவும் அரிசி தட்டவும்.
  8. அரிசி வெந்து மேலே வரும்.எலுமிச்சை பாதி பிழியவும்.பிரட்டி மூடியிட்டு தம்மில் 7-10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.10 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி பரிமாறவும்.
  9. சுவையான காளான் பிரியாணி தயார்.கோபி65,மல்லி துவையல்,வெங்காயப்பச்சடியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE