Home / Recipes / Iyengar akkaravadisal

Photo of Iyengar akkaravadisal by Krishnasamy Vidya Valli at BetterButter
1488
3
0.0(0)
0

Iyengar akkaravadisal

Nov-23-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Iyengar akkaravadisal RECIPE

விசேஷ நாட்களில் அய்யங்கார் ஆத்தில் செய்யப்படும் இனிப்பு ரெசிப்பி வகை இது. முழுக்கமுழுக்க பால் விட்டு சாதம் வேக வைத்து செய்யும் இனிப்பு பொங்கல் . சர்கரை பொங்கல் போல் அல்லாமல் கொஞ்சம் தளற (நெகிழ்ந்து) இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பச்சரிசி - 1 / 8 கப்
  2. பாசிப்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  3. பால்- (1 / 8 கப் +1/2 தேக்கரண்டி )×6 (ஒரு பங்கு அரிசி பருப்பிற்கு ஆறு பங்கு பால்)
  4. இந்த அளவுக்கு 200 மிலி (தோராயமாக)
  5. வெல்லம் - 1 / 4 கப்
  6. நெய் - 4 தேக்கரண்டி
  7. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  8. முந்திரி பருப்பு - 10
  9. கிஸ்மிஸ் - 10

Instructions

  1. முதலில் குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய்யில் அரிசி பருப்பு வறுத்துக்கொள்ளவும்
  2. நான்கு அரை மடங்கு பால் சேர்த்து குக்கரில் 8 விசில் வேக வைக்கவும்
  3. கடாயில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை கரையவிடவும்
  4. வெல்லத்தை வடிகட்டிக்கொள்ளலாம்
  5. குக்கரில் ப்ரஷர் இறங்கிய பின் திறந்து நன்றாக மசித்துக்கொள்ளவும்
  6. மீதி பாலை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும்
  7. வெல்லகரைசலை சேர்த்து நன்றாக கிளறவும்
  8. ஏலப்பொடி சேர்க்கவும்
  9. நன்றாக கொதித்து செமி சாலிட் பதம் வந்தவுடன் இறக்கி விடலாம்
  10. மீதி நெய்யில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் வறுத்து அதே நெய்யுடன் சேர்க்கவும்
  11. பறிமாறும் போது தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கவும். நேரம் ஆக ஆக கெட்டியாகி விடும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE