Home / Recipes / Vegetable Rice

Photo of Vegetable Rice by Asiya Omar at BetterButter
576
5
0.0(0)
0

Vegetable Rice

Nov-23-2017
Asiya Omar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable Rice RECIPE

காய்கறிகளுடன், மசாலா,தேங்காய்ப் பால,அரிசி சேர்த்து செய்வது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 5

  1. சீரக சம்பா பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி- அரைக் கிலோ
  2. காய்கறி - கால் கிலோ(கேரட்,பீன்ஸ்,பட்டாணி,உருளை,விரும்பினால் பீட்ரூட்)
  3. வெங்காயம் - 150 கிராம்
  4. தக்காளி-150 கிராம்
  5. மல்லி,புதினா- தலா ஒரு கையளவு
  6. பச்சை மிளகாய் -5
  7. இஞ்சி பூண்டு விழுது - 5 தேக்கரண்டி
  8. கரம் மசாலா -1 தேக்கரண்டி
  9. (ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்)
  10. தயிர் -100 மில்லி
  11. எலுமிச்சை -பாதி
  12. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா அரை தேக்கரண்டி
  13. தேங்காய்ப்பால் - அரைகாயிலிருந்து
  14. எண்ணெய் 100 மில்லி
  15. நெய் -50 மில்லி
  16. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. நறுக்க வேண்டியவைகளை நறுக்கி,எல்லாம் தயார் செய்து வைக்கவும்.
  2. அரிசி ஊற வைக்கவும்,தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.
  3. அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா சேர்க்கவும்.
  4. சிம்மில் வைத்து வதக்கவும்.
  5. மல்லி,புதினா,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி,சிறிது உப்பு சேர்த்து மூடி போடவும்.
  7. கூட்டு போல் ஆனவுடன் மஞ்சள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
  8. காய்கறிகள் சேர்க்கவும்.
  9. சேர்த்து பிரட்டவும.சிறிது மூடி வேக விடவும்.
  10. தயிர் சேர்க்கவும்.
  11. நன்கு கலந்து விடவும்.
  12. எல்லாம் சேர்ந்து பாதி வேக்காடு வெந்து வரும் பொழுது அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு, அரை தேங்காயில் எடுத்த தேங்காய்ப்பாலை அளந்து,முதல் பால்,இரண்டாம்,மூன்றால் பால் எல்லாம் சேர்த்து இரண்டு அளவாக எடுத்து வைக்கவும்.
  13. தேங்காய்ப்பால் சேர்க்கவும்.கொதி வரும் பொழுது அரிசியை தட்டவும்.
  14. அரிசி வெந்து மேலே வரும் பாதி எலுமி ச்சை பிழியவும்,நெய் சேர்க்கவும்.
  15. அலுமினியம் பாயில் கொண்டு மூடி தம் போடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.கீழே பழைய தோசை தவாவை வைத்தால் அடி பிடிக்காது.
  16. 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.திரும்ப 10 நிமிடம் கழித்து சட்டியை திறக்கவும்.
  17. சுவையான காய்கறிச்சோறு தயார். இதனை விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE