Home / Recipes / Fish Biriyani

Photo of Fish Biriyani by fathoom hameed at BetterButter
490
3
0.0(0)
0

Fish Biriyani

Dec-05-2017
fathoom hameed
45 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Kerala
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பிரியானி அரிசி 1/2 கிலோ
  2. தண்ணீர் 650 மில்லிலிடர்
  3. வஞ்சரம் மீன் 1/2 கிலோ
  4. பல்லாரி வெங்காயம் 200 கிராம்
  5. தக்காளி 100 கிராம்
  6. பச்சை மிளகாய் 4
  7. மல்லி இலை (தேவையான அளவு)
  8. புதினா இலை (தேவையான அளவு)
  9. ரம்பை இலை (தேவையான அளவு)
  10. பட்டை 1
  11. ஏளக்காய் 5
  12. பிரியானி இலை 2
  13. எலுமிச்சை 1
  14. இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி
  15. தயிர் 1/4 கப்
  16. முந்திரி பருப்பு 100 கிராம்
  17. நெய் 200 கிராம்
  18. தேங்காய் விழுது 1/4 கப்
  19. உப்பு (தேவையான அளவு)
  20. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி
  21. சோம்பு தூள் 1 தேக்கரண்டி
  22. இறால் 15

Instructions

  1. பிரியானி அரிசியை 1/2மணி நேரம் ஊர வைத்து வடிகட்டி, 650 மில்லிலிடர் தண்ணீர், உப்பு, ரம்பை இலை, கொஞ்சம் நெய் விட்டு சாதம் தயார் செய்துக்கொள்ளவும்.
  2. இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து உப்பு, வத்தல் தூள் போட்டு வரட்டிக்கொள்ளவும்.
  3. மீனை சுத்தம் செய்து அதனுடன் 1 மேஜைக்கரண்டி வத்தல் தூள், 1 மேஜைக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது, உப்பு, சோம்பு தூள் போட்டு 1/2 மணிநேரம் விரவி வைக்க வேண்டும்.
  4. வரட்டிய இறாலையும், விரவிய மீன், முந்திரி பருப்பு இவைகளை சிறிது நெய் விட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
  5. மீதம் இருக்கும் நெய்யில் நறுக்கிய பல்லாரி வெங்காயம் கொஞ்சம் போட்டு சிறிது பொறியவிட்டு அதில் இஞ்சிபூண்டு விழுது, தயிர், ஏலக்காய், பட்டை, பிரியானி இலை, ரம்பை இலை போட்டு தாளிக்கவும்.
  6. பின் அதனுடன் மீதம் உள்ள பல்லாரி, தக்காளி, பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா இலை, வத்தல் தூள், உப்பு, போட்டு வேகவைக்கவும்.
  7. சிறிது வெந்ததும் தேங்காய் விழுது விட்டு 5 நிமிடத்தில் அடுப்பை அனைக்கவும்.
  8. தயார் செய்த சாதத்துடன் இந்தக்கலவையை சேர்த்து பொரித்து வைத்திருக்கும் மீன், இறால், முந்திரி சேர்த்து கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE