Home / Recipes / Chicken Cheese Pizza

Photo of Chicken Cheese Pizza by fathoom hameed at BetterButter
254
6
0.0(0)
0

Chicken Cheese Pizza

Dec-10-2017
fathoom hameed
90 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken Cheese Pizza RECIPE

பார்டி உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Christmas
  • Italian
  • Snacks

Ingredients Serving: 4

  1. மைதா 2 கப்
  2. சீனி 1 மேஜைக்கரண்டி + 1 தேக்கரண்டி
  3. உப்பு 1/2 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
  4. ஈஸ்ட் 1 தேக்கரண்டி
  5. ஆலிவ் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி
  6. வெதுவெதுப்பான தண்ணீர் 1 கப்
  7. தக்காளி 4
  8. பூண்டு 6 பல்
  9. குடைமிளகாய் 1 + 2 (சிறியது)
  10. ஓரிகானோ 1 தேக்கரண்டி + 2 தேக்கரண்டி
  11. கோழி 250 கிராம்
  12. இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
  13. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  14. தயிர் 1 மேஜைக்கரண்டி
  15. தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி
  16. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  17. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  18. சீஸ் 250 கிராம்
  19. வெங்காயம் 1 (வட்டமாக நறுக்கியது)

Instructions

  1. 2 கப் மைதாவுடன் 1 தேக்கரண்டி ஈஸ்ட், 1 மேஜைக்கரண்டி சீனி, 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து வெதுவெப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து இறுதியாக ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து 1 மணி நேரம் உப்புவதர்க்கு மூடி வைக்கவும்.
  2. பிட்ஜா சாஸ் செய்வதர்க்கு: 4 தக்காளியில் கீரல் இட்டு வெண்ணீரில் போட்டு தோல் நீக்கி 2 தக்காளியை நறுக்கி 2 தக்காளிையை அரைத்துக்கொள்ளவும்.
  3. 1 குடைமிளகாயை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். பூண்டையும் தோல் நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு வானலியில் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய் போட்டு தாளித்து அரிந்த தககாளி, அரைத்த தக்காளி போட்டு 1/2 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி சீனி, 1 தேக்கரண்டி ஓரிகனோ போட்டு சுன்டி வந்ததும் இறக்கவும்.
  5. கோழியுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், கரமசாலா, தயிர், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி சாஸ் சேர்த்து வரவி 1 மணி நேரம் ஊர வைத்து வரட்டிக் கொள்ளவும்.
  6. பிட்ஜா செய்யும் முறை: பேக் செய்யும் தட்டில் எண்ணெய் தடவி மாவை பரப்பிக்கொள்ளம்.
  7. மாவின் மேல் தயார் செய்து வைத்த சாஸ் தடவி, அதன் மேல் ஒரிகானோ துவி அதன் மேல் சீஸ் துருவி போடவும்.
  8. பின் வரட்டிய கோழி போட்டு, வட்ட வடிவில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய குடைமிளகாய் போட்டு அதன் மேல் சீஸ், ஓரிகானோ போட்டு 200 டிகிரியில் 40 நிமிடம் பேக் செய்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE