Home / Recipes / Falooda

Photo of Falooda by Asiya Omar at BetterButter
397
4
0.0(0)
0

Falooda

Dec-17-2017
Asiya Omar
1440 minutes
Prep Time
0 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Hard
  • Dinner Party
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 10

  1. சேமியா - 50 கிராம்
  2. அரை லிட்டர் கெட்டி பால் காய்ச்சியது.
  3. பாதாம் பிசின் ஊற வைத்தது - இரண்டு கப்
  4. நன்னாரி சர்பத் - 4 மேஜைக்கரண்டி
  5. சப்ஜா ஊற வைத்தது - ஒரு கப்
  6. ஊற வைத்து பொடியாக நறுக்கி நட்ஸ் வகைகள்- 1 கப்
  7. டூட்டி ப்ரூட்டி - அரை கப்
  8. பிடித்த ப்லேவரில் ஜெல்லி தயார் செய்து வைக்கவும்.
  9. பழங்கள் நறுக்கியது - 2 கப்
  10. விரும்பினால் கஸ்டர்ட் காய்ச்சியும் வைக்கலாம்.
  11. அல்லது வெனிலா ஐஸ்கிரீம் 1 லிட்டர்.

Instructions

  1. டெசர்ட பவுல் அல்லது உயர கண்ணாடி தம்ளர்கள் தயாராய் இருக்கட்டும்.
  2. முதல் நாளே பாதாம் பிசின் 5 துண்டுகள் ஊற வைக்கவும்.அது மறுநாள் ஊறி 2கப் அளவு வரும்.நன்னாரி சர்பத் சேர்த்து ஊற வைக்கவும்.
  3. சப்ஜா விதை ஒரிரு மேஜைக்கரண்டி ஊற விட்டு வைக்கவும்.
  4. ஜெல்லி ரெடிமேட் பேக் வாங்கி காய்ச்சியும் வைக்கலாம்.நான் ருஹாப்ஸா ப்லேவரில் காய்ச்சி தயாராய் வைத்தேன்.
  5. மறுநாள் பாலுடன் சேமியா சுவைக்கு சீனி சேர்த்து காய்ச்சி வைக்கவும்.
  6. பாதாம்,பிஸ்தா,முந்திரி நறுக்கி வைக்கவும்.டூட்டி ப்ரூட்டி எடுத்து வைக்கவும்.
  7. கலந்த பழங்கள் இரண்டு கப் நறுக்கி வைக்கவும்.எல்லாம் தயார்.கஸ்டர்ட் காய்ச்சி கலந்தும் வைக்கலாம்.
  8. இனி ஒரு அழகிய கண்ணாடி தம்ளர் அல்லது பவுலில் பால் சேமியா 2 மேஜைக்கரண்டி வைக்கவும். அடுத்து நன்னாரி சிரப்பில் ஊறிய பாதாம் பிசின் ஒரு மேஜைக்கரண்டி வைக்கவும்.
  9. ஊறிய சப்ஜா சேர்க்கவும்.பழங்கள் சேர்க்கவும்.சுவைக்காக கஸ்டர்ட் காய்ச்சி கலந்து வைத்தேன்.
  10. ஜெல்லி சேர்க்கவும்.
  11. ஐஸ்கிரீம் சேர்க்கவும். நட்ஸ் ,டூட்டி ப்ரூட்டி அலங்கரிக்கவும்.
  12. ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் வைக்கவும்.மேலே நட்ஸ் ,டூட்டி ப்ரூட்டி தூவி அலங்கரிக்கவும்.
  13. சுவையான பலூடா தயார்.பார்ட்டியில் பரிமாறினால் அசந்து விடுவார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE