Home / Recipes / Szechwan Chicken

Photo of Szechwan Chicken by Asiya Omar at BetterButter
94
5
0.0(0)
0

Szechwan Chicken

Dec-28-2017
Asiya Omar
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Chinese
  • Pan fry
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. சிக்கன் துண்டுகள் -400 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  3. சில்லி விழுது -1 தேக்கரண்டி
  4. எண்ணெய்- தேவைக்கு.
  5. சில்லி ஆயில் அல்லது சிக்கன் பொரித்த எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  6. பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
  7. பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
  8. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
  9. வினிகர் -1 தேக்கரண்டி
  10. சீனி -1 தேக்கரண்டி
  11. கிள்ளிய மிளகாய் வற்றல் -2
  12. வெள்ளை எள்ளு -1/2 தேக்கரண்டி
  13. பொடித்த மிளகு -1/2 தேக்கரண்டி
  14. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்
  15. சிக்கன் ஸ்டாக் - கால் கப்
  16. அஜினொமோட்டோ - 1 பெரிய பின்ச்
  17. கார்ன் மாவு -1 மேஜைக்கரண்டி ( கால் கப் நீரில் கரைக்கவும்)
  18. உப்பு - தேவைக்கு.
  19. அலங்கரிக்க நறுக்கிய வெங்காயத்தாள்.

Instructions

  1. எல்லாப் பொருட்களும் தயாராய் இருக்கட்டும்.
  2. சுத்தம் செய்து அலசி நீர் வடித்த சிக்கன் துண்டுகளுடன்,இஞ்சி பூண்டு விழுது,சில்லி பேஸ்ட் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. தவாவில் சிறிது அல்லது மூழ்க எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. 3 மேஜைக்கரண்டி சிக்கன் பொரித்த எண்ணெய் உடன் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு,கிள்ளிய வற்றல்,எள்ளு,பொடித்த மிளகு சேர்த்து வதக்கவும்.
  5. அடுத்து சோயா சாஸ்,வினிகர்,சீனி,வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
  6. சிக்கன் ஸ்டாக், அஜினோமோட்டோ சேர்க்கவும்.கொதி வரட்டும்.
  7. பொரித்த சிக்கன் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.
  8. கார்ன் மாவு கரைசல் விடவும்.உடனே நன்றாக பிரட்டி விடவும்.எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்.
  9. அடுப்பை அணைக்கவும்.ஒரு பவுலில் எடுத்து நறுக்கிய வெங்காயத்தாள் அலங்கரித்து சூடான சோறு,ப்ரைட் ரைஸ்,நாண்,ரொட்டியுடன் பரிமாறலாம்.
  10. நான் நம்ம ஊரு வழக்கப்படி சூடு சோறுடன் பரிமாறினேன்.செமை.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE