Home / Recipes / Cauliflower Pepper Fry

Photo of Cauliflower Pepper Fry by Saraladevi Chandrabose at BetterButter
1543
5
0.0(0)
0

Cauliflower Pepper Fry

Feb-21-2018
Saraladevi Chandrabose
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. காலிபிளவர் - 1 கப்
  2. பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
  3. பச்சை மிளகாய் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு - 1தேக்கரண்டி
  7. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. மல்லித்தூள் - 1தேக்கரண்டி
  10. சீரகத்தூள் - 1 /4 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  13. உப்பு - தேவையான அளவு
  14. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. முதலில் பூவை தனித்தனியாக பிரித்து தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் நறுக்கிய பூவைப் போட்டு உப்பு சிறிது போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து 2 நிமிடம் மூடி போட்டு மூடி வைக்கவும்
  3. அதன் பின் பூக்களை கவனமாக புழு எதுவும் இல்லாமல் தனித்தனியாக கரண்டியால் எடுத்து தனியாக வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து சீரகம் சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் இதில் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  5. பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து லேசாக வதக்கி 1மேஜைக்கரண்டி தண்ணீர் விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் காலிபிளவர் சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும். பின் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE