Home / Recipes / Jigarthanda

Photo of Jigarthanda by Karkuzhali Shanmugam at BetterButter
1436
6
0.0(0)
0

Jigarthanda

Mar-04-2018
Karkuzhali Shanmugam
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jigarthanda RECIPE

ஜிகர்தாண்டா - மதுரையின் மிக பிரபலமான ஒரு பானம். இதை தயாரிப்பதற்கு முக்கியமாக பயன்படுத்த படுவது பால் மற்றும் பாதாம் பிசின். இந்த செய்முறையில் நான் கோயா வும் பயன் படுத்தி உள்ளேன். இது அதிக ருசியை தரும்.

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Chilling
  • Cold Drink

Ingredients Serving: 2

  1. 1 1 /2 லிட்டர் பால்
  2. 3 அல்லது 4 கட்டி பாதாம் பிசின்
  3. 4 மேஜை கரண்டி கோயா
  4. 2 மேஜை கரண்டி காரமேல் சிரப்
  5. 2 ஸ்கூப் ஐஸ் கிரீம்
  6. 2 மேஜை கரண்டி நன்னாரி சிரப்

Instructions

  1. பாதாம் பிசினை தண்ணீரில் குறைந்தது 7 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அது ஜெல் போன்று கிடைக்கும். 3 அல்லது 4 கட்டிகளை ஊற வைத்தாலே 1 கப் அளவு கிடைக்கும். ஊறியதும் மணல் போன்று இருக்கும்.
  2. பாலை மிதமான சூட்டில் பாதி அளவு வரும் வரை சுண்ட காய்ச்சவும். தேவை பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கலாம். நன்னாரி சிரப் மற்றும் கேரமல் சிறப்பில் ஏற்கனவே இனிப்பு சுவை இருக்கும், அதனால் தேவை எனில் பாலில் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
  3. பின்பு காய்ச்சிய பாலை, குளிர்சத்தான பெட்டியில் 1 மணிநேரம் குளிர வைக்கவும்.
  4. ஒரு குவளை யில் 1 மேஜை கரண்டி ஊற வைத்த பாதாம் பிசினை போடவும்.
  5. பின்பு 1 மேஜை கரண்டி நன்னாரி சிரப் ஊற்றவும். அதன் பின்பு 2 மேஜை கரண்டி கோயா வை போட்டு ஒரு கரண்டியால் கலக்கவும்
  6. பின்பு, சுண்ட காய்ச்சி குளிர வைத்த பாலை குவளையில் முக்கால் பகுதி வரும் அளவு ஊற்றி கரண்டியால் கலக்கி விடவும்.
  7. இறுதியாக ஐஸ் கிரீம் யை மேலே வைத்து பறி மாறவும். சுவையான , குளிர்ச்சியான ஜிகர்தண்டா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE