Home / Recipes / Beetroot Paniyaram

Photo of Beetroot Paniyaram by Sowmya Sundar at BetterButter
268
2
0.0(0)
0

Beetroot Paniyaram

Mar-16-2018
Sowmya Sundar
600 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot Paniyaram RECIPE

பீட்ரூட் துருவல் வதக்கி பணியார மாவில் கலந்து செய்துள்ளேன். காலை அல்லது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு தரலாம். சத்தானது. மாவு அரைத்து வைத்து கொண்டால் சுலபத்தில் செய்து தரலாம்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. பீட்ரூட் துருவல்- 1 கப்
  2. வெங்காயம்-1
  3. பச்சை மிளகாய்-3
  4. இஞ்சி துருவல்-1 டேபிள் ஸ்பூன்
  5. இட்லி அரிசி-1 கப்
  6. பச்சரிசி-1 கப்
  7. உளுத்தம்பருப்பு-1/2 கப்
  8. கடலை பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  9. வெந்தயம்-1 டேபிள் ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் - பணியாரம் செய்வதற்கு
  12. கடுகு 1 டீஸ்பூன்
  13. உளுத்தம்பருப்பு-1 டீ ஸ்பூன்
  14. கறிவேப்பிலை சிறிது
  15. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்

Instructions

  1. அரிசி மற்றும் பருப்பு வகைகளை களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் தண்ணீர் வடித்து விட்டு (தனியாக எடுத்து வைக்கவும்) சிறிது ஊறிய தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. மாவை ஆறு மணி நேரம் வரை வெளியில் வைத்து பொங்க விடவும்.பின்னர் ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவையான போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்
  4. பீட்ரூட் ,இஞ்சி துருவி கொள்ளவும.வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டி வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்
  6. பின் அதனுடன் பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. வதங்கியதும் அதை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்
  8. குழி பணியார கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை விட்டு மிதமான தீயில் வேக விடவும்
  9. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்
  10. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE