Home / Recipes / Paav Bhaji

Photo of Paav Bhaji by விருதை சமையல் at BetterButter
360
4
0.0(0)
0

Paav Bhaji

Mar-19-2018
விருதை சமையல்
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 5

  1. உருளைக்கிழங்கு - 2 ( சிறிதாக நறுக்கியது)
  2. தக்காளி - 2 ( பொடியாக நறுக்கியது)
  3. பச்சைப்பட்டாணி - 1/2 கப்
  4. பெரிய வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கியது)
  5. குடை மிளகாய் - 1  ( பொடியாக நறுக்கியது)
  6. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  8. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
  9. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  11. எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
  12. கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  13. வெண்ணெய் - தேவையான அளவு
  14. உப்பு - தேவையான அளவு
  15. தண்ணீர் - தேவையான அளவு
  16. பன் - ஐந்து

Instructions

  1. பாவ் பாஜி மசாலா செய்வதற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சைப்பட்டாணி ஆகியவற்றைப் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும். 
  2. பின் வெந்ததும் நீரை வடித்து, மசித்துக் கொள்ளவும்.  
  3. வாணலியில் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். 
  4. பிறகு இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  5. அவை நன்கு வதங்கியதும் அத்துடன்  குடைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.  
  6. அதனுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். 
  7.  பின் மசித்த காய்களை அத்துடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை விட்டு கலக்கவும். ( தண்ணீரை அதிகமாக விடக் கூடாது)
  8. சிறிது நேரம் கழித்து மசாலாவில் தண்ணீர் வற்றி கெட்டியாக ஆனதும், அதில் எலுமிச்சை சாற்றை விட்டு கிளறி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும். 
  9. பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் பன்னின் நடுபகுதியை இரண்டாக நறுக்கி, அதன் மேல் வெண்ணெய்யைத் தடவி சூடாக்கிக் கொள்ளவும். 
  10. இறுதியாக தயாரித்து வைத்திருந்த மசாலாவை பன்னின் நடுவே வைத்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
  11. சுவையான பாவ் பாஜி தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE