Home / Recipes / Red kidney beans cutlet

Photo of Red kidney beans cutlet by Shaima Fathima at BetterButter
474
3
0.0(0)
0

Red kidney beans cutlet

Mar-22-2018
Shaima Fathima
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Red kidney beans cutlet RECIPE

இது மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்தமான ஆரோக்கியமான கட்லட்.

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. காரமணி பயறு - 100 கிராம்
  2. பெரிய வெங்காயம்- 1
  3. தக்காளி - 1/2
  4. இஞ்சி ,பூண்டு பேஸ்ட்- 1/4 தேக்கரண்டி
  5. உப்பு - தேவைக்கு
  6. எண்ணை -பொரித்தெடுக்க
  7. முட்டை- 1
  8. பிரவுன்பிரட் பவுடர் - 2 கப்
  9. மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள்- 1/4 தேக்கரண்டி
  11. பெருஞ்சீரகத்தூள்(சோம்பு)- 1/2 தேக்கரண்டி
  12. நச்சீரகத்தூள்- 1/4தேக்கரண்டி
  13. மல்லி இலை- 1 மேஜைகரண்டி அளவு

Instructions

  1. கிட்னி பீன்ஸை அரை மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில்   போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி எடுக்கவும்.
  3. கிட்னி பீன்ஸ் ஆறியதும் அதை தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில்  கையில் உருண்டை பிடிக்கும் பதத்தில் அரைத்து எடுக்கவும்.
  4. அடுப்பில் வாணலி வைத்து அதில் 3 டேபிள் கரண்டி எண்ணெய் விட்டு அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ஐந்து நொடிகள் கழிந்த பின் நறுக்கி வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. நன்றாக வதங்கிய பின் அதில் முதலில் கூறிய மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம்  கிளறிவிடவேண்டும்.
  6. பின் வேக வைத்து அரைத்து வைத்திருக்கும் கிட்னி பீன்ஸில் வதக்கிய வெங்காயம்,தக்காளி மசாலா வுடன்தேவையான உப்பு சேர்த்து  அதனுடன் மல்லிக்கீரை சேர்த்து ஒன்றாக பிசைந்து கட்லட் வடிவத்தில் பிடித்து வைக்கவேண்டும்.
  7. முட்டையை ஒரு கிண்ணத்தில் அடித்து வைத்து அதில் இந்த கட்லட்டை தோய்த்து எடுத்து பிரட் பொடியில் பிரட்டி எண்ணையில் போட்டு பிரவுன் நிறத்தில் பொரித்து எடுக்க வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE