Home / Recipes / Nargisi Koftha Dosa

Photo of Nargisi Koftha Dosa by Saivardhini Badrinarayanan at BetterButter
413
3
0.0(0)
0

Nargisi Koftha Dosa

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nargisi Koftha Dosa RECIPE

சுவையான பால் சம்மதமான பொருள்கள் அணைத்து சேர்த்து கோப்தா செய்து தோசையில் பூரணமாக வைத்து செய்த காலை உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Mughlai
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. பன்னீர் 1/2 கப் துருவியது
  2. உருளைக்கிழங்கு 1 வேக வைத்தது
  3. பசலைக்கீரை 1/2 கப்
  4. வெங்காயம் 1 நறுக்கியது
  5. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  6. பூண்டு 3 பல்
  7. இஞ்சி சிறிய துண்டு
  8. பச்சைமிளகாய் 2
  9. கொத்துமல்லி இலை
  10. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  11. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  12. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  13. ஜீரக தூள் 2 மேஜைக்கரண்டி
  14. பிரேஷ் கிரீம் 3 மேஜைக்கரண்டி
  15. கார்ன் பிளார் மாவு 1 மேஜைக்கரண்டி
  16. மைதா 1 மேஜைக்கரண்டி
  17. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  18. பிரட் தூள் 1/2 கப்
  19. தயிர் 1/3 கப்
  20. பால் 1/4 கப்
  21. கஸ்தூரி மேத்தி 1 மேஜைக்கரண்டி
  22. வறுத்த வெங்காயம் 1 /4 கப்
  23. வறுத்த முந்திரி 1/4 கப்
  24. உப்பு

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் , கரம் மசாலா, வெங்காயம், இஞ்சி பூண்டு நறுக்கியது சுத்தம் செய்த பசலைக்கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர் , வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கிய கீரை கலவை , கார்ன் பிளார் மாவு, மைதா, கொத்துமல்லி இலை , உப்பு , பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பின் பன்னீர் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக மிதமான சுட்டியில் பொரித்து எடுக்கவும்.
  4. ஒரு மிக்ஸில் வறுத்த வெங்காயம், வறுத்த முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  5. பின் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்ர்த்து நன்கு காய்ந்த பின் அணைத்து மசாலா பொருள்களை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து , அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் தயிர் ,பால் பிரேஷ் கிரீம் சேர்த்து கலந்து விடவும்.
  6. பின் உப்பு, கோப்தா உருண்டைகளை அந்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  7. பின் கஸ்தூரி மேத்தி நன்கு உள்ளங்கையில் நசுக்கி தூவி பிரேஷ் கிரீம் சிறிது சேர்த்து இறக்கவும்.
  8. பின் கொஞ்சம் அந்த கிரேவி கோப்தாவுடன் எடுத்து நன்கு மசித்து வைக்கவும்.
  9. பின் ஒரு தோசை கல் சூடு ஆனதும் தோசை ஊற்றி மசித்து வைத்த கலவையை நடுவில் வைத்து நன்கு மொறு மொறு வென்று வார்த்து எடுத்தால் நர்கிசி கோப்தா தோசை மிகவும் நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE