Home / Recipes / Pani puri

Photo of Pani puri by Saivardhini Badrinarayanan at BetterButter
401
4
0.0(0)
0

Pani puri

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pani puri RECIPE

சுவையான மாலை சிற்றுண்டி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. ரவை 1 கப்
  2. கோதுமை மாவு 1/4 கப்
  3. புதினா 1 கப்
  4. கொத்துமல்லி இலை 1/2 கப்
  5. கருப்பு உப்பு 1 மேஜைக்கரண்டி
  6. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  7. ஜல்ஜீரா தூள் 1 மேஜைக்கரண்டி
  8. தண்ணீர் 3 கப்
  9. உருளைக்கிழங்கு 2
  10. கருப்பு கொண்டைக்கடலை 1/2 கப்
  11. வெங்காயம் 1
  12. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  13. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  14. பச்சைமிளகாய் 2
  15. எலுமிச்சை 1

Instructions

  1. முதலில் ரவை , கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வெந்நீர் ஊற்றி நன்கு மிருதுவாக பிசைந்த பின் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் புதினா, கொத்துமல்லி இலை, பச்சைமிளகாய், இஞ்சி, புளி கொஞ்சம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரைத்த புதினா விழுது சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கருப்பு உப்பு, ஜல்ஜீரா தூள், ஜீரக தூள், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வடிகட்டவும்.
  4. பின் ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  5. பின் வேக வைத்த இரண்டையும் நன்கு மசித்து கொள்ளவும்.
  6. பின் அதில் மிளகாய் தூள் , உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  7. பின் பிசைந்து வைத்த மாவை 1 மணி நேரம் கழித்து சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி போல் தேய்த்து சின்ன முடியில் அழுத்தி சிறிய வட்டம் செய்து எண்ணெய் காய்ந்த பின் பூரி போல் பொரித்து எடுக்கவும்.
  8. பொறித்த பூரியை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் நாவுத்து போகாது.
  9. பின் ஒரு பூரி எடுத்து உருளைக்கிழங்கு கலவை, நறுக்கிய வெங்காயம் , புதினா நீர் சேர்த்து பரிமாறவும்.
  10. பாணி பூரி தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE