Home / Recipes / Palak leaves chat

Photo of Palak leaves chat by Subashini Krish at BetterButter
145
6
0.0(0)
0

Palak leaves chat

Apr-11-2018
Subashini Krish
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Palak leaves chat RECIPE

பாலக் கீரைகளை கொண்டு செய்யப்படும் இந்த சாட் இனிப்பு புளிப்பு காரம் அனைத்தையும் உள்ளடக்கியது

Recipe Tags

  • Veg
  • Easy
  • North Indian
  • Snacks

Ingredients Serving: 5

  1. நடுத்தர அளவுள்ள முழு பாலக் கீரை இலைகள் 15-20
  2. கடலை மாவு 200 கிராம்
  3. உப்பு தேவையான அளவு
  4. ஓமம் 1/2 டீஸ்பூன்
  5. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  6. இனிப்பு சட்னிக்கு:- பேரீட்சை 10
  7. புளி 1 அங்குலம்
  8. வெல்லம் 100 கிராம்
  9. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  10. சீரக தூள் 1 டீஸ்பூன்
  11. பச்சை சட்னிக்கு:- புதினா 1/2 கப்
  12. கொத்தமல்லி தழை 1 கப்
  13. பச்சை மிளகாய் 2
  14. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  15. இஞ்ஜி 1/2 அங்குலம்
  16. சீரகம் 1 டீஸ்பூன்
  17. இனிப்பு தயிர் :- புளிப்பில்லாத கெட்டி தயிர் 1 கப்
  18. சர்க்கரை பொடித்தது 1/2 கப்
  19. ஓமப்பொடி 100 கிராம்

Instructions

  1. பாலக் கீரையை நன்கு கழுவி ஈரமில்லாமல் காய வைக்கவும்.
  2. பேரீட்சை + புளியை அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்து வெல்லம், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இனிப்பு சட்னி தயார் செய்து கொள்ளவும்
  3. பச்சை சட்னிக்கான அனைத்து பொருட்களையும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்
  4. தயிருடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்விக்கவும்.
  5. கடலை மாவுடன் ஓமம், தண்ணீர், உப்பு சேர்த்து நீர்க்க கரைக்கவும்.
  6. எண்ணெயை காயவைத்து ஒவ்வொரு இலைகளையும் தனித்தனியாக கரைத்த மாவில் முக்கி முறுகலாக பொரிக்கவும்
  7. பொறித்தவற்றை ஒரு பெரிய தட்டில் அடுக்கி முறையே பச்சை சட்னி,தயிர்,இனிப்பு சட்னி ஒவ்வொரு இலை மீதும் ஊற்றி ஓமப்பொடி தூவி உடனே பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE