Home / Recipes / Sev Puri Chat

Photo of Sev Puri Chat by Saivardhini Badrinarayanan at BetterButter
315
3
0.0(0)
0

Sev Puri Chat

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Karnataka
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா 1/2 கப்
  2. ரவை 1/2 கப்
  3. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  4. ஓமம் 1 மேஜைக்கரண்டி
  5. உருளைக்கிழங்கு 2
  6. வெங்காயம் 1
  7. தக்காளி 1
  8. கொத்துமல்லி இலை 1/2 கப்
  9. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  10. ஓம பொடி / சேவ் - 1/2 கப்
  11. வறுத்த கடலை பருப்பு 2 மேஜைகரண்டி
  12. வருட
  13. வேர்கடலை 1/4 கப்
  14. பச்சைமிளகாய் 2
  15. எலுமிச்சை சாறு 1/2
  16. உப்பு
  17. பேரிச்சம் பழம் 10
  18. வெல்லம் 1/2 கப்
  19. புளி சிறிதளவு
  20. எண்ணெய்

Instructions

  1. பப்டி பூரி / தட்டை தயாரிக்க : ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, ஜீரகம், ஓமம், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பின் சப்பாத்தி போல் தேய்த்து சிறிய மூடியில் அழுத்தி சிறிய வட்டமாக செய்யவும். பின் போர்க் கரண்டியில் அழுத்தம் தரவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேக வைத்து தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  5. மசித்த கிழங்குடன் , நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, மிளகாய் தூள், சாட் மசாலா , உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  6. பச்சை சட்னி : ஒரு மிக்ஸியில் வேர்கடலை, கொத்துமல்லி இலை ,பச்சைமிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
  7. ஸ்வீட் சட்னி: ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து அதில் பேரிச்சம் பழம், புளி சேர்த்து நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்து சுண்டிய பிறகு ஒரு வடிகட்டில் வடிகட்டவும்.
  8. வடிகட்டிய நீரை கடாயில் சேர்த்து அதில் வெல்லம் , உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
  9. வெங்காயம், தக்காளி , கொத்துமல்லி இலை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  10. சேவ் பூரி சாட் : ஒரு தட்டில் பொறித்த பப்டி பூரி அடுக்கி கொள்ளவும்.
  11. அதில் கிழங்கு கலவை வைக்கவும்.
  12. பின் அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி வைக்கவும்.
  13. பின் அதன் மேல் பச்சை சட்னி ஊற்றவும்.
  14. பின் அதன் மேல் ஸ்வீட் சட்னி வைக்கவும்.
  15. பின் அதன் மேல் ஓம பொடி தூவவும்..
  16. பின் அதன் மேல் கொத்துமல்லி இலை,வறுத்த கடலைப்பருப்பு, வேர்கடலை, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE