Home / Recipes / Threaded chicken

Photo of Threaded chicken by Shaima Fathima at BetterButter
563
4
0.0(0)
0

Threaded chicken

May-17-2018
Shaima Fathima
45 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Threaded chicken RECIPE

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு.

Recipe Tags

  • Non-veg
  • Frying
  • Snacks

Ingredients Serving: 6

  1. போன்லெஸ் சிக்கன்- 1/2 கிலோ
  2. இஞ்சி, பூண்டு விழுது-2 தேக்கரண்டி
  3. பெரியவெங்காயம்- 1/2 பகுதி
  4. குடைமிளகாய்- 1/2 பகுதி
  5. எண்ணைய்- 2 மேஜைக்கரண்டி
  6. எண்ணைய் பொரித்தெடுக்க- 1 கப்
  7. நல்லமிளகுதூள்- 1/4 தேக்கரண்டி
  8. சில்லி சாஸ்- 1 மேஜைக்கரண்டி
  9. சோயா சாஸ்- 1&1/2மேஜைக்கரண்டி
  10. ஸமோஸா ஷீட்- 10
  11. உப்பு - தேவைக்கு
  12. மைதா- 1/2 தேக்கரண்டி
  13. சோளமாவு- 1/2 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் சிக்கனை சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி இஞ்சி,பூண்டு விழுது,உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  2. வெங்காயம், குடைமிளகாய் சிறியதாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. சிக்கன் ஆறியதும் அதை உதிரியாக எடுத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. அடுத்து அதில் சிக்கன் சேர்த்து அதனுடன் சோயா சாஸ், சில்லி சாஸ் , நல்லமிளகுதூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
  6. மைதாவையும் சோளமாவையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் தயார்செய்து வைக்கவும்.
  7. சிக்கன் கலவை ஆறியதும் அதை  நீள்சதுரவடிவில் பிடித்து வைக்கவும்.
  8. சமோஸாஷீட்டை நீளவாக்கில் ஒல்லியாக கீறிஎடுக்கவும்.
  9. இதில் பிடித்து வைத்த சிக்கனை, மைதா & சோளமாவு கலவையில் முக்கி எடுத்து கீறி வைத்துள்ள சமோஷா ஷீட்டில் சுற்றி எடுக்கவும்.
  10. அடுப்பில் கடாய் வைத்து எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சிறிய தீயில் கோல்டன்நிறம் வரும் வரை  பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE