Home / Recipes / Country chicken fry

Photo of Country chicken fry by Priyadharshini Selvam at BetterButter
367
4
0.0(0)
0

Country chicken fry

May-19-2018
Priyadharshini Selvam
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Country chicken fry RECIPE

ஆரோக்கியமான நாட்டு கோழி வறுவல் ரெசிப்பி.பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள்.

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 4

  1. நாட்டுக் கோழி - 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
  3. தக்காளி - 2
  4. குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  7. ஏலக்காய் - 2
  8. பட்டை - 2
  9. கிராம்பு - 2
  10. சோம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
  11. மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
  12. கொத்தமல்லி - சிறிது
  13. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. முதலில் நாட்டுக் கோழியை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
  3. அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள சிக்கனை மட்டும் சேர்த்து, குழம்பு மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு மசாலா கோழியுடன் ஒன்று சேர பிரட்டி விட வேண்டும்.
  4. ஒருவேளை அடிப்பிடிப்பது போல் இருந்தால், அதோடு சிறிது சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், நாட்டுக்கோழி வறுவல் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE