வீடு / சமையல் குறிப்பு / சோளம் குழிப்பணியாரம்

Photo of Cholam Kuzhi Paniyaram by Sowmya Sundar at BetterButter
629
1
0.0(0)
0

சோளம் குழிப்பணியாரம்

Jun-06-2018
Sowmya Sundar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோளம் குழிப்பணியாரம் செய்முறை பற்றி

சோளம் மற்றும் உளுந்து சேர்த்து செய்யலாம் சுவையான குழி பணியாரம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோளம்-1கப்
  2. உளுந்து-1/4 கப்
  3. வெந்தயம்-1டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. தாளிக்க
  6. பெரிய வெங்காயம்-1
  7. பச்சை மிளகாய்-3
  8. கறிவேப்பிலை சிறிது
  9. கடுகு -1டீ ஸ்பூன்
  10. பெருங்காயம்-1/2டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சோளம் ,உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் விட்டு ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. பின்னர் உப்பு சேர்த்து ஆறு மணி நேரம் வரை வைத்து புளித்து பொங்க விடவும்
  4. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து வதக்கி மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. குழி பணியாரக் கடாயில் எண்ணெய் தடவி மாவை குழிகளில் முக்கால் அளவு விட்டு நன்றாக வெந்ததும் திரும்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்