வீடு / சமையல் குறிப்பு / கேரட் அரிசி மினி போண்டா

Photo of Carrot rice mini bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
516
0
0.0(0)
0

கேரட் அரிசி மினி போண்டா

Jun-13-2018
Krishnasamy Vidya Valli
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரட் அரிசி மினி போண்டா செய்முறை பற்றி

இது நோ ஆனியன் நோ கார்லிக் ரெசிபி. எளிதில் செய்யலாம். ஒருவருக்கு நான்கு வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி -1/4 கப்
  2. துவரம் பருப்பு -1/8 கப்
  3. கேரட் துருவல் -1/4 கப்
  4. தேங்காய் துருவல் -1/8 கப்
  5. கொத்தமல்லி இலை -1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
  6. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  7. உப்பு -3/4 தேக்கரண்டி
  8. பச்ச மிளகாய் -2
  9. இஞ்சி -1 சிறிய துண்டு
  10. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை சேர்த்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்
  2. பச்ச மிளகாய் இஞ்சி உப்பு பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  3. அதோடு கேரட் துருவல், தேங்காய் துருவல் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறுசிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்
  5. ஏதாவது சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்